கொம்பன் வசூல் நிலவரம்

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் கார்த்தி - லட்சுமிமேனன் நடிப்பில் வெளியான கொம்பன் படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
கொம்பன் படத்தை சுமார் 300 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். இந்த படம் சம்பந்தமாக எதிர்பாராத சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் முதலில் திட்டமிட்டிருந்தபடி இப்படம் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகவில்லை! சுமார் 200 தியேட்டர்களில்தான் வெளியானது. பிரச்சனை முடிந்து படம் வெளியான நாளிலிருந்தே கொம்பன் படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு! அதனால் தியேட்டர்காரர்கள் கொம்பன் படத்தைத் திரையிட ஆர்வம் காட்டுகிறார்களாம். எனவே மேலும் 120 தியேட்டர்களில் கொம்பனை திரையிட திட்டமிட்டு அதற்கான வேலைகள் இப்போது மும்முரமாக நடந்து வருகிறது.

இது ஒரு பக்கமிருக்க, கொம்பன் படத்தின் வசூல் விநியோகஸ்தர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 21 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதில் என்ன வேடிக்கை தெரியுமா? தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடந்த இராமநாதபுரம், மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் இப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget