HTC டிசயர் 826 ஸ்மார்ட்போன்

அனைவரும் எதிர்பார்த்தபடி, எச்.டி.சி. நிறுவனம், தன் புதிய டிசையர் 826 ஸ்மார்ட் போனை, அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு
அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 25,990 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1920 x 1080 பிக்ஸெல் திறன் கொண்ட 5.5 அங்குல அளவிலான திரை உள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 615 குவாட் கோர் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5 லாலிபாப். இதன் யூசர் இன்டர்பேஸ் ஆக, எச்.டி.சி. சென்ஸ் இயங்குகிறது. இதிலும் டிசையர் 820 கட்டமைப்பு உள்ளது. இதன் முன்புறமாக, ஸ்டீரியோ எச்.டி.சி. பூம் சவுண்ட் ஸ்பீக்கர்கள் டோல்பி ஆடியோ அமைப்புடன் செயல்படுகின்றன. இரண்டு சிம்களை இயக்குவதுடன், 4ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. 

இதன் அறிமுக விழாவில் பேசிய, எச்.டி.சி. நிறுவனத்தின் தெற்கு ஆசியப் பிரிவு தலைவர், “எங்களுடைய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைத் தொடர்ந்து அறிந்து, மிகச் சிறந்த தரத்தில், ஆச்சரியப்படத்தக்க வகையில், ஸ்மார்ட் போன் ஒன்றை, எச்.டி.சி. 826 மூலம் தந்திருக்கிறோம்” என்று கூறினார்.

இதன் மற்ற தனிச் சிறப்பம்சங்கள்: 2 ஜி.பி. ராம் நினைவகம், 16 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 128 ஜி.பி. வரை அதிகப்படுத்தும் வசதி. இரண்டு நானோ சிம் பயன்படுத்தும் வசதி. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 13 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, வைட் ஆங்கிள் லென்ஸ், 3.5 மிமீ ஹெட்செட் ஜாக் ஆகியன. இந்த ஸ்மார்ட் போனின் தடிமன் 7.74 மிமீ. எடை 155 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ. கேட் 4, 3ஜி, வை பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். ஆகியன தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 2,600 mAh திறன் கொண்டது. வெள்ளை, நீலம் மற்றும் நெருப்பு பழுப்பு ஆகிய வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் போன் கிடைக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget