பாதி விலைக்கு ஆப்பிள் வாட்ச்

நாம் அணிந்து பயன்படுத்தக் கூடிய டிஜிட்டல் சாதனங்களில், ஆப்பிள் வாட்ச் புதிய கோணங்களைக் காட்ட இருக்கிறது. இந்த ஆப்பிள் வாட்ச் 50% தள்ளுபடி
விலையில் கிடைக்க இருக்கிறது. இந்த புதிய சாதனத்தை அறிமுகம் செய்ததன் மகிழ்ச்சியைத் தன் ஊழியர்களுடன் கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் ஆப்பிள் வாட்ச் 50% தள்ளுபடி விலையில் தரப்பட இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் அல்லது ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட் ஆகிய இரு மாடல்களில் ஒன்றைத் தங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பெறுபவர்களுக்கு இந்த தள்ளுபடி விலை கிடைக்கும். 

வரும் ஏப்ரல் 10ல் ஆப்பிள் வாட்ச் பெறுவதற்கான முன் பதிவு தொடங்குகிறது. அன்று தொடங்கி 90 நாட்களுக்குள், தள்ளுபடி விலையில் பெறுவதற்கு ஆப்பிள் ஊழியர்களுக்குக் கால வரையறை தரப்பட்டுள்ளது.
இது குறித்து ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாகி குறிப்பிடுகையில், “ ஆப்பிள் நிறுவன சாதனங்கள், வேறு எந்த நிறுவனத்தின் சாதனங்களுடன் ஒப்பிடுகையில், அதிகமாகவே மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. மக்களின் கற்பனைக்கெட்டாத வகைகளில், நம் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைய இருக்கிறார்கள். அவர்களுடன், நம் ஊழியர்களும் அந்த மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது” என்று கூறியுள்ளார். 

சாம்சங் மற்றும் பிற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இந்த சலுகை தாராள எண்ணத்துடன் தரப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். சாம்சங் மிகக் குறைந்த அளவிலேயே தன் ஊழியர்களுக்கு சலுகை அளிக்கிறது. ஐபோன் முதன் முதலில் 2007ல் வெளியான போது, அனைத்து ஊழியர்களும் ஒன்றைப் பரிசாகப் பெற்றனர். ஆனால், இப்போது ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், ஆப்பிள் நிர்வாகம் 50% சலுகையை அறிவித்துள்ளது. செப்டம்பர் 29, 2007ல், ஐபோன் வெளியான போது, ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றிய முழு நேர ஊழியர்கள் 21,600 பேர். தற்போது, இந்த எண்ணிக்கை 92,600 ஆக உயர்ந்துள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச் வரும் ஏப்ரல் 24 அன்று மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. முன் பதிவு ஏப்ரல் 10ல் தொடங்குகிறது. இந்த வாட்ச் இரண்டு அளவுகளில், மூன்று மாடல்களில் வெளி வரும். 349 டாலரில் தொடங்கி, 17,000 டாலர் வரை இவற்றின் விலை உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 அறிமுகப்படுத்தியபோது, தன் ஊழியர்கள் அனைவருக்கும், விண் 8 பதிந்த லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றைப் பரிசாக வழங்கியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget