கூகுளின் வருடாந்திர தொழில்நுட்ப காட்சியான, 'கூகுள் ஐ/ஓ' கடந்த மே, 18 முதல், 20ம் தேதி வரை நடந்தது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தின், மவுண்டெய்ன் வியூவில் நடந்த
இந்த காட்சி, மென்பொருள் மற்றும் வன்பொருள் விற்பன்னர்களுக்கானது தான் என்றாலும், இதை நடத்துவது கூகுள். கூகுள் சம்பந்தப்பட்ட சகல புதுமைகளும் அறிமுகப்படுத்தப்படும் களம்.
எனவே, இந்த வருடாந்திர காட்சி மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகியிருக்கிறது. இந்த காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டவற்றில் சில எதிர்பாராதவை. சில, ஏற்கனவே கூகுள் வெளியிட்டவற்றின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகள். ஓட்டுனரில்லாமல் செல்லும், 'கூகுள் கார்' பற்றிய பெரிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதைப் பற்றிய பேச்சே இல்லை.
என்றாலும், 'அமெரிக்காவில் குடியேறிய இந்தியரான சுந்தர் பிச்சையின் தலைமையில் இயங்கும் கூகுள், பெரிய, புதிய தொழில்நுட்பங்களின் மீது பந்தயம் கட்ட அஞ்சாது என்பதை, கூகுள் ஐ/ஓ காட்சி நிரூபித்திருக்கிறது' என்று மெச்சுகிறது, 'தி வெர்ஜ் டாட் காம்' என்ற இணையதளம். கூகுள் ஐ/ஓவில் அறிமுகமான சில தொழில்நுட்பங்கள் இதோ:
அலோ: வித்தியாசமான அரட்டை மென்பொருள்: வழக்கமான குறுஞ்செய்தி செயலிகளில் உள்ள எமோஜிக்கள், ஸ்டிக்கர்கள், புகைப்படங்களை இணைக்கும் வசதி போன்றவை கூகுளின், 'அலோ' குறுஞ்செய்தி, செயலியிலும் உண்டு. ஆனால், இதில், கூகுளின் டிஜிட்டல் அசிஸ்டென்டையும் பயன்படுத்தும் வசதி உண்டு. அரட்டை அடித்துக்கொண்டிருக்கும்போதே டிஜிட்டல் அசிஸ்டென்டை கூப்பிட்டு உதவும்படி கோரலாம். அலோவில் உள்ள அத்தனை அரட்டைகளும், 'என்கிரிப்ஷன்' எனப்படும் ரகசிய சங்கேத முறையில் பரிமாறப்படும். எனவே, சம்பந்தப்பட்டவர்களைத் தவிர யாரும் விவரங்களை பார்க்க முடியாது. சில செய்திகளுக்கு தேதியும் நேரமும் குறித்து அனுப்பினால் அதற்குப் பின், அந்த செய்தி தானாகவே அழிந்துவிடும்.
டூயோ: முகம் பார்த்து அரட்டை அடிக்கலாம்!: அலோவைப் போலவே, 'டூயோ'வும் ஒரு அரட்டை செயலி தான். ஆனால், முழுவதும் வீடியோ மூலம் நடக்கும் அரட்டை. இது, ஆப்பிள் ஐபோனில் உள்ள, 'பேஸ் டைம்'மிற்கு நேரடி போட்டி.
நீங்கள் டூயோவை பயன்படுத்த துவங்கியதும், 'செல்பி' கேமரா மூலம் உங்கள் உருவம் முதலில், திரையில் சிறியதாக தெரியும். இது, நீங்கள் அழைக்கும் நபருக்கும் தெரியும். கூப்பிடுவது யார் என்று மறுமுனையிலிருப்பவர் பார்த்துவிட்டு, விருப்பமிருந்தால் அழைப்பை ஏற்பார். இந்த வசதியை, 'நாக்... நாக்' என்கிறது கூகுள்.
மொபைல் செயலியான டூயோவை பயன்படுத்த உங்கள் மொபைல் போன் எண்ணைத் தரவேண்டும். இது, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ்., செயலிகளில் சில மாதங்களில் கிடைக்கும்.
கூகுள் அசிஸ்டன்ட்: சொன்னபடி கேளு!: 'ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளில் இயங்கும் இந்த, 'டிஜிட்டல்' உதவியாளருக்கு குரல் மூலம் உத்தரவுகள் இடலாம். இது இடம் பொருள் ஏவலை புரிந்து செயல்படும். சுந்தர் பிச்சையே இதை அறிமுகப்படுத்தினார். அருகே உள்ள தியேட்டர்களில் என்ன படங்கள் ஓடுகின்றன என்று கேட்டு, டிக்கெட் முன்பதிவு செய்யும்படி உத்தரவிட்டார் சுந்தர். கூடவே, தன் மனைவி, குழந்தைகளும் வருவர் என்று சொன்னார். அவர் சொன்னதை புரிந்துகொண்டு டிக்கெட்டை முன்பதிவு செய்தது, கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட். ''அலோ மற்றும் 'கூகுள் ஹோம்' ஆகியவற்றைப் போலவே இருந்தாலும், தனித்து இயங்கும் செயலி இது. சாதனங்களைத் தாண்டி, தன்னை சுற்றி உள்ள சூழலை புரிந்துகொண்டு இயங்கும் செயலி இது,'' என்றார் சுந்தர்.
டேட்ரீம்: பகல் கனவல்ல மெய்நிகர் உலகம்!: 'விர்ச்சுவல் ரியாலிட்டி' எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்ப துறையில் கூகுள் சில ஆண்டுகளுக்கு முன் கால்பதித்தது. 'கார்ட்போர்ட்' என்ற மலிவான வி.ஆர்., தொழில்நுட்பம் அது. ஆனால், இப்போது 'டேட்ரீம்' என்ற மொபைல் போனுக்கு தனிப்பட்ட வி.ஆர்., இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது. இது 'பேஸ்புக்'கின், 'அகுலஸ் ரிப்ட்' மற்றும் எச்.டி.சி.,யின், 'வைவ்' ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். டேட்ரீம், கூகுள் வசமுள்ள ஆண்ட்ராய்டின் அடிப்படையில் இயங்கும்.
கூகுளுக்கு சொந்தமான யு ட்யூப், தெருக் காட்சிகளைக் காட்டும் 'ஸ்ட்ரீட் வியூ' மற்றும் கூகுள் பிளேஸ்டோரில் திரைப்படங்கள், கூகுள் புகைப்படங்களை மெய்நிகரில் பார்க்க டேட்ரீம் உதவும்.
இதற்கு, டேட்ரீம் - மெய்நிகர் மென்பொருளை ஒரு மொபைலில் தரவிறக்கம் செய்யவேண்டும். இந்த மொபைலை ஒரு 'வி.ஆர்., ஹெட்செட்'டின் உள்ளே வைத்து, அணிந்துகொண்டால் கண் முன்னே முப்பரிமாண உலகம், 360 டிகிரியில் விரியும்.
மொபைல் கேம்கள், விமான பயிற்சி, மருத்துவர்களுக்கான அறுவை சிகிச்சை பயிற்சி என்று விரிவடைய காத்திருக்கும் துறைகளுக்கு எதிர்காலத்தில், டேட்ரீம் அடிப்படை மெய்நிகர் இயங்குதளமாக இருக்கும்.
திரைப்படங்களை மெய்நிகர் வடிவில் காட்ட, எச்.பி.ஓ., மற்றும் நெட்ப்ளிக்ஸ் உட்பட பல திரைப்பட நிறுவனங்களை கூகுள் ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால், 2017ல் வரப்போகும் மொபைல் போன்களில் தான் டேட்ரீம் இயங்கும். ஏற்கனவே சாம்சங், எச்.டி.சி., - எல்.ஜி., ஹுவெய் போன்றவை டேட்ரீமை இணைத்துத் தர ஒப்புக்கொண்டுள்ளன.
ஆண்ட்ராய்டு என்: படு திறமைசாலி, படு சுறுசுறுப்பு!: கூகுளின் சொந்த மொபைல் இயங்குதளமான ஆண்ட்ராய்டின் அடுத்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு. இரட்டைத் திரைக் காட்சிகள், குயிக் செட்டிங் பட்டன்கள், புதிய எமோஜிக்கள் என்று இது தோற்றத்திலும், செயலிலும் மேம்படுத்தப்பட்டிருப்பதாக ஆண்ட்ராய்டு விசுவாசிகள் பாராட்டுகின்றனர். மொபைல் போன் கேம்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்படி இதை வடிவமைத்திருக்கின்றனர். வழக்கமாக கிட் கேட், லாலி பாப், மார்ஷ்மாலோ என்று இனிப்பு அயிட்டங்களின் பெயர்களையே ஆண்ட்ராய்ட் பதிப்புகளுக்கு கூகுள் பெயர் வைக்கும். இந்த முறை இறுதி வரை பெயர் வைக்காமல் சஸ்பென்ஸ் காக்கிறது கூகுள். அனேகமாக, இணையவாசிகளிடமே யோசனை கேட்க கூகுள் நினைத்திருக்கலாம்.
அதற்கு, நம் கேரள இணையவாசிகள், 'நெய்யப்பம்' என்று பெயர் வைக்க, சுந்தர் பிச்சையிடம் கோரி வருகின்றனர். சிலர், கேரளாவைத் தாண்டினால் நெய்யப்பம் யாருக்கும் தெரியாது. எனவே, லட்டு, பர்பி என்று அகில இந்திய இனிப்புப் பெயர்களை வைக்கலாம் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. பார்க்கலாம், எந்த இனிப்பு வெல்லம், மன்னிக்கவும் வெல்லும் என்று!
கூகுள் ஹோம்: புத்திசாலி வீட்டு உதவியாளர்: இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமேசான் வெளியிட்ட, 'எக்கோ' என்ற வீட்டு டிஜிட்டல் உதவி சாதனத்திற்கு நேரடி போட்டி கூகுளின் 'ஹோம்'.எப்போதும் இயங்கும் மைக், தேவைப்பட்டால் இயங்கும் ஸ்பீக்கர், கூகுளின் டிஜிட்டல் அசிஸ்டென்ட் என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆகியவற்றை கொண்டுள்ள ஹோம், பார்க்க பூ வைக்கும் ஜாடி போல இருக்கிறது. ஆனால், வீட்டிலுள்ள பிற 'புத்திசாலி' சாதனங்களுடன் இதை இணைத்துவிட்டால், உங்கள் வாய்வழி உத்தரவுக்கேற்ப பல காரியங்களை ஹோம் செய்து முடிக்கும். 'வாட்டர் ஹீட்டரை ஆன் பண்ணு, ப்ரிஜ்ஜில் பால் இல்லேன்னா, நெட்ல போய் ஆவினுக்கு ஆர்டர் பண்ணு, இளையராஜாவோட நல்ல பாட்டு போடு, முன் கதவை லாக் பண்ணு...' என்று உட்கார்ந்த இடத்திலிருந்து உத்தரவு போட்டால் போதும். ஹோம் செய்து முடிக்கும். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மனித குரலிலேயே பதில் சொல்லவும் இதனால் முடியும். ஹோம், சந்தைக்கு வர, 2018 ஆகிவிடும் என்று தெரிகிறது.

கருத்துரையிடுக