உலக அழகியின் லிப்ஸ்டிக்

சமீபத்தில் பிரான்ஸில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து 15வது ஆண்டாக நடிகை ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றார்.
ஐஸ்வர்யாவின் அழகு முன்பு போல் இல்லை சிலர் கிண்டல் செய்தனர். மேலும் லாரியல் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார். இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் அதிக மேக் - அப் இல்லாமல், வயலட் கலர் லிப்ஸ்டிக்குடன், சாதாரணமாக தான் தோற்றமளித்தார். மேலும் அவர் அணிந்திருந்த ஆடையை 5 தையல்காரர்கள் 300 மணிநேரம் செலவிட்டு தயாரித்ததாக கூட செய்தி வந்தது. அதேசமயம் அவரின் ஆடை வடிவமைப்பு, லிப்ஸ்ட்டிக் பற்றியும் விமர்சனங்களும் வந்தன.

இந்நிலையில் அதே கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற சோனம் கபூரிடம் ஐஸ்வர்யாவின் உடை மற்றும் லிப்ஸ்ட்டிக் பற்றி கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது... ''அன்றைய தினம் ஐஸ்வர்யா ராய் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார், ஏனென்றால் அன்றைக்கு அனைவரின் பார்வையையும் அவர் தன் பக்கம் ஈர்த்திருந்தார் என்றார். மேலும் அவரிடத்தில், ஐஸ்வர்யா ராய் லாரியல் அழகு சாதன பொருட்கள் சார்பில் கலந்து கொண்டது பற்றி கேட்டபோது, லாரியல் சார்பாக அவர் பங்கேற்றது போன்று தெரியவில்லை, அங்கு அமுல் கம்பெனியும் இருந்ததாக எல்லோரும் பேசினார்கள் என்று சோனம் கபூர் கூறினார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget