பெண் வேடத்தில் கலக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் ஹீரோக்களில் பெண் கெட்டப்பில் பல நடிகர்கள் நடித்துள்ளனர். அதில், கமல்ஹாசன் அவ்வை சண்முகியில் பெரும்பாலான காட்சிகளில் மாமி கெட்டப்பில் நடித்திருந்தார். முன்னதாக,
ஆணழகன் படத்தில் பிரசாந்த் பெண் வேடத்தில் நடித்தார். அவர்கள் இரண்டு பேருமே மிக அற்புதமாக நடித்திருந்ததால் இப்போதுவரை அந்த பெண் வேடங்கள் உதாரணமாக காண்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அவர்கள் நடித்த அந்த கதாபாத்திரங்களுக்கு பெண் குரலில் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள்தான் குரல் கொடுத்தனர்.

ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்துள்ள ரெமோ படத்தில் அவருக்கு அவரே குரல் கொடுத்துள்ளாராம். சின்னத்திரையில், தனது ஜனரஞ்சகமான பேச்சு மூலம் பெருவாரியான நேயர்களை கவர்ந்து வந்த சிவகார்த்திகேயன், மிமிக்ரி பேசுவதிலும் வல்லவராக இருந்தார். அந்த வகையில, ரெமோ படத்தில் தான் நடிக்கும் நர்ஸ் வேடத்துக்கு தானே பெண் குலில் டப்பிங் பேசியும் அசத்தியுள்ளாராம். ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இஞ்சினியரான ரசூல் பூக்குட்டி அப்படத்தின் சவுண்ட் இஞ்சினியராக இருப்பதால் சிவகார்த்திகேயனின் குரலை ஒர்ஜினல் பெண் குரலைப்போலவே அவுட்புட் காண்பித்துள்ளாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget