குத்துப்பாட்டில் கும்மாங்குத்து ஸ்ரேயா

ஜெயம்ரவி நடித்த மழை படத்தில் கொட்டும் மழையில் குத்தாட்டம் போட்ட படிதான் கோலிவுட்டிற்குள் என்ட்ரி ஆனார் ஸ்ரேயா. மேலும் படத்துக்குப்படம் நாயகியாக நடித்தபோதும் பாடல்
காட்சிகளில் குத்தாட்ட நடிகைகள் ரேஞ்சுக்கு ஆட்டம் போட்ட ஸ்ரேயாவுக்கு, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஆடிய அயிட்டம் பாடலே பின்னர் அவரது கோலிவுட் மார்க் கெட்டுக்கும் வேட்டு வைத்தது.

ஆனபோதும் அதன்பிறகு விக்ரமுடன் ராஜபாட்டை படத்துக்காக லட்டு லட்டு ரெண்டு லட்டு என்று குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா, தெலுங்கு, இந்தியிலும் அயிட்டம் பாடல்களில் ஆடிவந்தார். பின்னர் தோழா படத்தில் நடித்த ஸ்ரேயாவுக்கு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 100வது படத்திலும் இன்னொரு நாயகி வேடம் கிடைத்துள்ளது. இந்த படத்தில் இளவரசி ரோலில் நடிக்கிறாராம் ஸ்ரேயா.

மேலும், ஆரம்பகாலத்தில் இருந்தே கதாநாயகியாக நடித்தபடி குத்துப்பாட்டுக் கும் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ள ஸ்ரேயா, தனது அபிமான டைரக்டர் களை தொடர்பு கொண்டு, நல்ல கேரக்டர் மற்றும் அயிட்டம் பாடல்களில் நடிக்க சான்ஸ் இருந்தாலும் வாய்ப்புக் கொடுங்கள் என்று படவேட்டை நடத்திவருகிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget