கபாலி நாயகி ராதிகா ஆப்தே

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்த பிறகே ராதிகா ஆப்தே பற்றி பலருக்கும் தெரிய வந்தது. பிரகாஷ் ராஜின் 'தோனி' படம் மூலம்
ஏற்கனவே தமிழில் அறிமுகமான முகம்தான் அவர். அதனைத் தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக 'அழகுராஜா' படத்தில் நடித்தார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்கிற மேடை நடிகையாக இருந்தவர் ராதிகா ஆப்தே.

2005 ஆம் ஆண்டு ஹீரோயினாக ஹிந்தியில் அறிமுகமான ராதிகா ஆப்தே, ஹிந்தி மட்டுமின்றி பெங்காலி, மராத்தி என வட இந்திய சினிமாவில் பாப்புலரானார். இப்போது இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினியின் 'கபாலி' பட நாயகியாகிவிட்டார் ராதிகா ஆப்தே. ஜூலை 1ஆம் தேதி 'கபாலி' படம் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக ராதிகா ஆப்தே கதாநாயகியாக நடித்திருக்கும் பாலிவுட் படம் 'ஃபோபியா' நாளை வெளியாகிறது. இப்படத்தில் பயந்த சுபாவமுள்ள ஒரு பெண்ணாக நடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget