கோடம்பாக்கம் கோதாவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'யூடர்ன்'. க்ரவுட் பண்டிங் மூலம் லூசியா (எனக்குள் ஒருவன்) படத்தை எடுத்து வெற்றி பெற்ற பவன் குமார் அதே க்ரவுண்ட் பண்டிங் முறையில் தயாரித்து வெளியிட்ட படம் 'யூடர்ன்'.
இதில் திலிப்ராஜ் ஹீரோவாக நடித்தார். ஹீரேயினாக நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்றவர் இப்போது அப்படியே யூடர்ன் அடித்து தமிழ் சினிமாவுக்கு வருகிறார். மிஷ்கின் உதவியாளர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். படத்தில் அவர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இதுகுறித்து ஷரத்தா கூறியிருப்பதாவது: ராணுவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தினால், எனக்கு பல தரப்பு மக்களுடன் பேசி பழகும் சூழ்நிலையும், பல்வேறு மாநில மக்களின் கலாச்சாரங்களை கற்று கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது. அடிப்படையில் சட்டம் பயின்று, வழக்கறிஞராக பணிபுரிவதால், வாழ்க்கையின் மதிப்புகளையும், சவால்களையும் நான் நன்கு அறிவேன். இது ஒரு புறம் இருந்தாலும், நாளுக்கு நாள் எனக்கு சினிமாவின் மேல் இருக்கும் ஈர்ப்பு அதிகமாகி கொண்டே போனது. அதுவே என்னை நடிப்பை மேம்படுத்தும் தியேட்டர் கலைகளில் கவனம் செலுத்தி, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்தது. அந்த அனுபவங்கள் தான் எனக்கு யூடர்ன் என்னும் கன்னட படத்திலும், தற்போது புதுமுக இயக்குனர் கௌதம் இயக்கும் இந்த தமிழ் படத்திலும் நடிக்க வாய்ப்பு வாங்கி தந்தது. பெங்களூரில் பிறந்த எனக்கு தமிழ்நாட்டு மக்கள் மீதும், தமிழ் சினிமா மீதும் ஒரு தனி மரியாதை உண்டு. இந்த படத்தின் மூலம் என்னை தமிழ் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்கிறார் ஷரதா ஸ்ரீநாத்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget