கபாலி ரிலீஸ் நிலவரம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் வெளியீடு இரு வாரங்களுக்குத் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. முதலில் படத்தை ஜுலை 1ம் தேதி வெளியிடுவதாகத்
திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இறுதிக் கட்டப் பணிகளில் இன்னும் பல சிறப்புகளைச் சேர்க்க வேண்டியிருப்பதால் அவற்றை முழுமையாக முடித்து பொறுமையாகவே படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர் தாணு முடிவு செய்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் டிசைனிலிருந்து படம் வரைக்கும் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும்படி படக்குழுவினர் கவனமாக வேலை பார்த்து வருகிறார்களாம். அதோடு படத்தின் இசை வெளியீட்டையும் விழாவாக நடத்தாமல் ஆடியோ சிடிக்களை நேரடியாக கடைகளுக்கு அனுப்பி விடவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ரஜினிகாந்த் அமெரிக்காவில் ஓய்வில் இருப்பதால் இந்த முடிவு என்கிறார்கள். அதோடு, ரஜினி படத்தின் இசை வெளியீடு என்றால் அதை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும். செலவைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றாலும் படத்தின் வேலைகள் நிறைய இருக்கும் போது, இசை வெளியீட்டிற்காக நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்ற யோசனையும் இருக்கிறதாம். இசை வெளியீட்டிற்கு இப்போதே பலரும் தங்களுக்கு அழைப்பு வேண்டும் என்று அன்புத் தொல்லை கொடுத்து வருகிறார்களாம். அவ்வளவு பேரும் அமரும்படி அரங்கத்தை உருவாக்கும் அளவிற்கு சென்னையில் இடம் இல்லை என்பது மற்றொரு பிரச்சனை. அதனால், அனேகமாக இசை வெளியீட்டு விழா நடப்பது சந்தேகம் என்றே சொல்கிறார்கள்.

'கபாலி' எப்போது வருகிறது என்று தெரியாமல் தங்களது படத்தை எப்போது வெளியிடுவது என்று சிறு படத் தயாரிப்பாளர்கள் நிறையே குழம்பிப் போயிருக்கிறார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget