பேன் தொல்லையா என்ன செய்யலாம்

தலையில் ஈரு, பேன் தொல்லையை போக்க, வேதிப்பொருட்கள் நிறைந்த ஷாம்புக்களைத் தான், இதுவரை நம்பியிருக்கிறோம். ஜெர்மனியைச்
சேர்ந்த பிரான் ஹோபர் ஆய்வு மையம், மின்னணு சீப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. ஏற்கனவே, அந்நாட்டில் சிறுவர் பிணி மருத்துவமனைகளில் சோதிக்கப்பட்டு வரும், இந்த சீப்பில் சில மின்முனைகள் இருக்கின்றன. 

தலையில் சீவும்போது, வினாடியில் ஒரு பகுதி நேரத்தில் மின்சாரம்மின் முனைகளில் பாயும். அப்போது இடைப்பட்ட தூரத்திலுள்ள காற்று அயனிமயமாக்கப்பட்டு, ஒரு பிளாஸ்மா போல செயல்படும். அந்த வெப்பத்தில், பேன் அல்லது ஈரு பேரதிர்ச்சிக் குள்ளாகிவிடும். 

ஆனால், மின்சாரமோ, வெப்பமோ சீவுபவரின் தலைக்கோ, முடிக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என, பிரான் ஹோபர் உறுதியாக சொல்கிறது. இந்த சீப்பால் சீவிய பின் பாதி பேன்கள், அப்போதே காலியாவதாகவும், மீதிபேன்கள் அடுத்த நாட்களில், வேறு எந்த சிகிச்சையும் இன்றி செத்து விடுவதாகவும், ஈருகள் பொரிக்காமலேயே காலியாகிவிடும் என்றும், பிரான் ஹோபர் ஆய்வு நிலையம் தெரிவிக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget