ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பில் இணைந்தது இந்தியா

ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில்(எம்.டி.சி.ஆர்) இந்தியா நேற்று இணைந்தது. இதன் உறுப்பு நாடுகளிடமிருந்து அதிநவீன ஏவுகணை தொழில் நுட்பங்களை
இந்தியா பெற முடியும். அணு எரிபொருள் வினியோக நாடுகளின் கூட்டமைப்பில்(என்.எஸ்.ஜி) சேர இந்தியா சமீபத்தில் தீவிர முயற்சி எடுத்தது. அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாததை காரணம் காட்டி, அதில் இந்தியா உறுப்பினராக சேர சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் என்எஸ்ஜி அமைப்பில் இந்தியா இடம் பெற முடியாமல் போனது. இந்நிலையில், என்.எஸ்.ஜி போல் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு(எம்.டி.சி.ஆர்) உள்ளது. 

இதில் ஏவுகணை தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த 35 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் இணைந்தால் இந்தியா அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பங்களை உறுப்பு நாடுகளிடம் இருந்து பெற முடியும். இந்த அமைப்பின் நோக்கமே பொறுப்பற்ற நாடுகளுக்கு ஏவுகணைகள், ராக்கெட்டுகள், ஆளில்லா விமான தொழில்நுட்பம், 500 கிலோ வெடிபொருளை சுமந்து குறைந்தது 300 கி.மீ சென்று தாக்கும் தொலை தூர ஏவுகணைகள், பேரழிவு ஆயுதங்கள் ஆகியவை கிடைப்பதை தடுப்பதுதான். இந்த அமைப்பில் இந்தியா நேற்று இணைந்தது. 

பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரே ஜெக்லர், நெதர்லாந்து தூதர் அல்போன்சஸ் ஸ்டோலிங்கா மற்றும் லக்சம்பர்க் தூதர் லாரே ஹூபெர்டி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயசங்கர் கையெழுத்திட்டார். இந்த அமைப்பில் சீனா உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘‘எம்டிசிஆர் அமைப்பில் 35வது நாடாக இந்தியா இணைந்துள்ளது. இதன் மூலம் ஏவுகணை தொழில்நுட்பம் பரவலை தடுக்க முடியும், உயர் தொழில் நுட்பங்களையும் இந்தியா பெற முடியும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget