எல்லோருக்கும் தெரிந்த ‘விக்ஸ் ஆக்ஷன் 500’ முதல், மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய ஃபிக்ஸட் டோஸ் காம்பினேஷன் வரை 344 மருந்துகளுக்கு அதிரடியாகத் தடை
விதித்திருக்கிறது மத்திய அரசு. இதை எதிர்த்து மருந்து உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இதற்கு மாறாக, ‘இது மிகப்பெரிய சமுதாயப் பிரச்னை என்பதால் இடைக்காலத் தடை விதிக்க முடியாது’ என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. நாடு முழுவதும் இதுபோல பல்வேறு விவாதங்களையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கும் மருந்துகளின் தடை பற்றி நிபுணர்களிடம் பேசினோம்...
‘மிகவும் காலதாமதமாக நிறைவேற்றப்பட்ட ஆணை என்றாலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன்’ என்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கப் பொதுச்செயலாளரான டாக்டர் ரவீந்திரநாத். ‘‘1970ம் ஆண்டிலேயே அறிவியலுக்குப் புறம்பான கூட்டு மருந்துகளின் விற்பனையை தடை செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டது. 2007ல் Nimesulide போன்ற சில மருந்துகளுக்கு மட்டும் தடை விதித்தார்கள். அதிக அளவிலான மருந்துகளை தடை செய்வது இதுவே முதல்முறை.
கூட்டு மருந்துகள் தயாரிப்பில் இருக்கும் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை ஆய்வு செய்ய 2014ல் மருத்துவக் குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு. இந்த கூட்டு மருந்துகளை ஆய்வு செய்த மருத்துவக் குழுவினர், ‘இந்த மருந்துகள் ஆரோக்கியம் தருபவை என்பதற்கான ஆதாரம் சிறிதும் இல்லை... மாறாக பக்கவிளைவுகள் நிறைய ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை’ என்று தெளிவுபடுத்தினார்கள். அந்த மருத்துவக் குழுவின் அறிக்கைக்குப் பிறகே, மத்திய அரசு கூட்டு மருந்துகள் தயாரிப்பையும் விற்பனையையும் தடை செய்துள்ளது.
ஒரு மாத்திரையில் அனைத்து மூலக்கூறுகளையும் சேர்த்து வழங்குவதையே கூட்டு மருந்துகள் (Fixed dose combination) என்கிறார்கள். உதாரணமாக, ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்தால் இரண்டுக்கும் சேர்த்து மருந்து வழங்கப்படும் முறைதான் கூட்டு மருந்து. ஆனால், இந்த முடிவை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே எடுக்க வேண்டும். மருந்து நிறுவனங்கள் காய்ச்சல், சளி, வலி என்று ஒன்றுக்கும் மேற்பட்ட நிவாரணங்களை ஒரே மருந்தில் தயாரித்து விற்கின்றன.
காய்ச்சல் மட்டுமே உள்ளவர் ஏன் சளிக்கும் வலிக்கும் சேர்த்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்? இதனால், நோயின் தேவையைத் தாண்டி சில மருந்துகள் நம் உடலில் சேர்கின்றன. அறியாமை காரணமாக, இதுபோல தேவைப்படாத நோய்க்கும் சேர்த்து மருந்து சாப்பிடும் நிலை நம் நாட்டில் மிக அதிகமாகவே காணப்படுகிறது. அறிவியலுக்குப் புறம்பான இதுபோன்ற கூட்டு மருந்துகள் ஏராளமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று பல ஆய்வுகள் கூறியிருக்கிறது.
வெளிநாடுகளிலும் கூட்டுமருந்துகள் விற்பனை இருக்கிறது.
ஆனால், இந்தியாவைப்போல் அனுமதி பெறாத, அளவுக்கு அதிகமான கூட்டு மருந்துகள் அங்கு இல்லை. குறிப்பாக, நம் நாட்டில் வலி நிவாரணிகளில் உள்ள கூட்டு மருந்துகளில் 70 சதவிகிதம் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெறாதவை.மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் பரிந்துரைக்கு உட்பட்டுதான் மருந்துகளின் விலையை நிர்ணயிக்க முடியும். அரசாங்கத்தின் இந்த விதியிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு மூலக்கூறு மட்டும் கொண்ட மருந்தைப் பெரும்பாலும் தயாரிப்பதில்லை. அதனால், ஒன்றுக்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் கொண்ட மருந்தைத் தயாரித்து விலை நிர்ணயக் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்துவிட முடியும் என்ற எண்ணத்தில்தான் கூட்டு மருந்துகளை மருந்து நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் பட்டியலிட்டுள்ள கூட்டு மருந்துகளின் மூலக்கூறுகள் மருத்துவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடியவை... சாதாரண மக்களுக்குப் புரியாது. அதனால், தடை செய்யப்பட்ட கூட்டு மருந்துகள் பட்டியலோடு, மருந்துகளின் விற்பனைப் பெயர்களையும் அரசு வெளியிட வேண்டும். மருந்துகளின் விற்பனைப் பெயரை வெளிப்படையாகச் சொல்லும்போது மட்டுமே சாதாரண மக்களுக்கும் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள் பற்றிப் புரியும்’’ என்கிறார் டாக்டர் ரவீந்திரநாத்.தடை செய்யப்பட்ட மருந்துகளில் பலவும் அன்றாடம் விளம்பரப்படுத்தப்படுகிற மருந்துகள்.
இதுபோல் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்கும் அளவுக்கு மருந்துப் பொருட்களை விளம்பரப்படுத்துவது சரியா என்று மருத்துவச் செயற்பாட்டாளர் சீனிவாசனிடம் கேட்டோம். ‘‘ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் ஓவர் தி கவுன்டர் முறையில் சில மருந்துகளை விற்க சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், அந்த அனுமதி அவலமாகி இங்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமலேயே எந்த மருந்துகளையும் வாங்கிவிடலாம் என்ற நிலைக்குச் சென்று இருக்கிறது. வணிகப் பொருட்களை பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செயல்தான் விளம்பரம்.
மருந்துப் பொருட்களை இதுபோல வணிகப் பொருள் என எண்ணி விட முடியாது. தலைவலிக்குப் பல காரணங்கள் இருக்கிறது. எந்தக் காரணத்தால் தலைவலி ஏற்படுகிறது என்பதை மருத்துவர் ஆலோசனையில்தான் கண்டறிய முடியும். இப்படி இருக்கையில் தலைவலி என்றவுடனே அதற்காக விளம்பரப்படுத்தப்பட்ட மாத்திரையை வாங்கி உட்கொண்டு விடும் போக்குதான் இங்கு நிலவுகிறது.
மருத்துவ ஆலோசனையின்றி இது போன்ற மருந்துகளை விற்பது எத்தனை தவறோ அத்தனை தவறு விளம்பரப்படுத்துவதும்’’ என்றவரிடம் மருந்து நிறுவனங்களிடம் மருத்துவர்கள் கமிஷன் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் பற்றிக் கேட்டோம்.‘‘நோயாளிகளுக்குத் தங்களது மருந்துகளைப் பரிந்துரைப்பதற்காக மருத்துவருக்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இந்திய அளவிலேயே மருத்துவர்கள் மீது இருந்து வருகிறது.
ஒரு மருந்தைப் பரிந்துரைப்பதற்காக மருத்துவர் கமிஷன் பெறுவது என்பது குற்றம் மட்டுமல்ல... தார்மீக ரீதியாகவும் தவறான செயல். ஏனென்றால், அதனால் நேரும் விளைவுகள் நோயாளிகளையே பாதிக்கும். ஒரு மருத்துவர் இதற்காக கமிஷன் வாங்குவதைத் தக்க ஆதாரங்களோடு நிரூபிக்கும் நிலையில் அவருக்கு சிறைத்தண்டனை கூட பெற்றுத் தரக்கூட வழிவகை உண்டு’’ என்கிறார் சீனிவாசன்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற கேள்வியை அதன் இயக்குநரான அப்துல் காதர் முன் வைத்தோம். ‘‘மத்திய அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டியது நம்முடைய கடமை. அதனால், அரசாணையை அமல்படுத்துவதற்குண்டான வேலைகளில் இருக்கிறோம். இதற்கு முன் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் மருந்துகளை அரசு தடை செய்யும். இப்போது முதன்முறையாக 344 மருந்துகளை அரசு தடை செய்திருக்கிறது.
எனவே, பிரச்னையைக் கவனமாகக் கையாண்டு வருகிறோம். ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து உற்பத்தியாளர்களுக்கும் தடை செய்யப்பட்ட மருந்து உற்பத்தியை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருக்கிறோம். மருந்துக் கடைகளுக்கும் விற்பனையை நிறுத்தச் சொல்லியிருக்கிறோம். எங்களுடைய மருந்து ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்’’ என்கிறார் அப்துல் காதர்.
மருந்துக்கடைக்காரர்கள் தரப்பின் கருத்தை அறிய அதன் செயலாளரான நடராஜனிடம் பேசினோம். ‘‘இப்போது நடந்திருக்கும் குளறுபடிக்குக் காரணம், மருந்து விற்பனை உரிமம் பெறுவதற்கான அனுமதி ஒரே குடையின் கீழ் இல்லாததுதான். மருந்துகளின் விற்பனைக்கு மத்திய அரசும் அனுமதி அளிக்கிறது. மாநில அரசும் அனுமதி அளிக்கிறது.
இதனால், மத்திய அரசு அனுமதி அளிப்பது பற்றி மாநில அரசுகளுக்குத் தெளிவு இல்லை. மாநில அரசு அனுமதி அளிப்பது பற்றி மத்திய அரசுக்கும் தெளிவு இல்லை. தமிழ்நாட்டில் ஒரு மருந்து உரிமம் மறுக்கப்பட்டால், உத்தரகாண்ட் மாநிலத்தில் சென்று அனுமதி வாங்கி விட முடியும். இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற அனுமதி இருப்பதால், அனுமதி மறுக்கப்பட்ட மாநிலத்திலேயே மீண்டும் வந்து விற்கவும் முடியும்.
இந்தக் குழப்பங்களை சரி செய்ய மருந்து விற்பனைக்கான அனுமதியை மத்திய அரசு மட்டுமே வழங்க வேண்டும். குறைந்தபட்சம், குறிப்பிட்ட கூட்டு மருந்துகளின் விற்பனையை அனுமதிக்கக் கூடாது என்ற பட்டியலையாவது மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக மருந்து கட்டுப்பாட்டுத்துறையினர் தடை செய்யப்பட்ட மருந்துகளை அப்புறப்படுத்தச் சொல்லி இருக்கிறார்கள். அரசின் தடைக்கு நாங்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். 344 மருந்துகளிலும் மொத்தம் 4 ஆயிரம் பிராண்டுகள் இருக்கின்றன.
அந்தப் பட்டியலை ஒரு சிறிய கையேடாகத் தயாரித்து மருந்துக்கடைகளுக்கு அனுப்பியிருக்கிறோம். விற்பனை செய்யாமல் அப்புறப்படுத்தச் சொல்லியிருப்பதோடு, மருந்து நிறுவனங்களிடமே திருப்பி எடுத்துக் கொள்ளவும் கூறியிருக்கிறோம். ஏப்ரல் 1 முதல் இந்த மருந்துகள் கடைகளில் இருக்காது’’ என்கிற நடராஜனிடம், இதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று கேட்டோம்.‘‘மார்ச் 10ம் தேதி மத்திய அரசின் அரசாணை வெளியானது. இதற்கு உடனே கேரள உயர்நீதிமன்றத்தில் 2 வாரங்களுக்கு இடைக்காலத் தடை வாங்கினார்கள்.
அதைத் தொடர்ந்து மேலும் ஒரு வாரம் தடை பெறப்பட்டது. இப்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக இடைக்காலத் தடை மார்ச் 28 வரை மருந்து நிறுவனங்கள் பெற்றிருக்கின்றன. தொடர்ந்து நீதிமன்ற விடுமுறை, கோடைகால விடுமுறை வருவதால் ஜூன் 2ம் தேதிக்குள் மருந்துகளின் பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம் தந்திருக்கிறது.
‘உங்கள் நிறுவனத்தின் மருந்துகளால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிரூபித்தால், மீண்டும் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படும்’ என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. வழக்கு தொடர்ந்திருக்கும் இந்த 20 மருந்து நிறுவனங்களும் மீண்டும் விற்பனைக்கான அனுமதி பெற்றால், அதே வழியில் மற்ற நிறுவனங்களும் அனுமதி வாங்கி விடுவார்கள். மீண்டும் அந்த 344 மருந்துகளும் விற்பனைக்கு வரும்.
ஒருவேளை மத்திய அரசுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால், ‘இனி கூட்டு மருந்துகளின் விற்பனையை அனுமதிக்காதீர்கள், தனியாகத் தயாரியுங்கள்’ என்று சொல்வார்கள். இதனால் மருந்துகளின் விலை குறையும் என்பது மக்களுக்கு கிடைக்கப் போகும் லாபம்.
தனித்தனியாக மருந்துகள் தயாரிக்க வேண்டும் என்பதால் நோயாளிகள் சாப்பிடும் மாத்திரைகளின் எண்ணிக்கை கூடும். 4 மாத்திரைகள் சாப்பிடுகிறவர்கள் 10 மாத்திரைகள் சாப்பிட வேண்டியிருக்கும். எந்த வேளைக்கு எந்த மாத்திரை என்பதிலும் நோயாளிகளுக்குக் குழப்பம் வரும். என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்’’ என்கிறார்.நல்லது நடந்தால் சரி!

கருத்துரையிடுக