நீங்க வெயிட் பார்ட்டியா

எடை குறைவானவர்களைவிட, பருமனான மனிதர்களே உலகில் அதிகம். 2025ல் உலக மக்களில் ஐந்தில் ஒரு பங்கு  பருமன் பட்டியலில்
வருவார்கள் என்கிறது ஒரு கணிப்பு. இந்தப் பட்டியலில் குழந்தைகள் இல்லை. 1975ல் 10.5  கோடியாக இருந்த பருமன் பார்ட்டிகளின் எண்ணிக்கை, 2014ல் 64.1 கோடியாக உயர்ந்திருப்பதை வைத்தே, அதன்  தீவிரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

* ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபர்கள், என்றோ ஒருநாள், கொஞ்சூண்டு மது அருந்தினாலும் அதன் விளைவால் தீவிர  உடல்நலக் குறைவுக்கு ஆளாவார்களாம். ஹெச்.ஐ.வி. பாதிக்காதவர்களுக்கு அதிக மது அருந்துவதால் ஏற்படுகிற  விளைவுகளை விட மோசமானது இது என்கிறது Drug and Alcohol Dependence  தகவல்.

* பசலைக்கீரை, லெட்டூஸ், முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்  கொள்கிறவர்களுக்கு, அதிலுள்ள நைட்ரேட் சத்தின் காரணமாக கண் அழுத்த நோய் தாக்கும் அபாயம் 30 சதவிகிதம்  வரை குறையும்.

* கர்ப்பத்தின் போது பிறப்புறுப்பில் ஏற்படுகிற ஈஸ்ட் தொற்றுக்காக உபயோகிக்கிற Fluconazole  மருந்து  கருக்கலைப்புக்கான 50 சதவிகித அபாயம் கொண்டது என எச்சரிக்கிறது அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனின்  பத்திரிகை தகவல்.

* மாவுச்சத்துள்ள, அதிக இனிப்பான உணவுகளை உண்பது நீரிழிவுக்கு ஆகாது எனத் தெரியும். அது நுரையீரல்  புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கும் என எச்சரிக்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி. இந்த எச்சரிக்கை புகைப்பழக்கம்  உள்ளவர்களுக்கு மட்டுமல்ல... புகை வாசனையே ஆகாதவர்களுக்கும்தான் என கூடுதல் ஷாக் தருகிறது அந்தஆராய்ச்சி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget