முன்னணி நாயகியான நிக்கி கல்ரானி

'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ரானி. அதன் பின் 'யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு
வந்துட்டா வெள்ளக்காரன்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். இதில், 'வே.வ.வெள்ளக்காரன்' படம் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பெற்றது. தற்போதுள்ள நடிகைகளில் இரண்டாம் நிலையில் உள்ள நாயகர்களுடன் நடிப்பதற்கு பொருத்தமான நாயகிகள் அதிகம் இல்லாததால் அந்த வாய்ப்புகள் நிக்கியைத் தேடி வருகின்றன.

தற்போது 'மொட்ட சிவா கெட்ட சிவா, கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் நிக்கி. தற்போது, 'கீ' என்ற புதிய படத்தில் ஜீவாவுடன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதோடு விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கும் ஒரு படத்திற்கும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் சில படங்களில் அவரை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

அழகுடனும், கிளாமருடனும், தமிழ் பேசத் தெரிந்த நடிகையாக இருப்பதும் நிக்கியைத் தேடி வாய்ப்புகள் வரக் காரணமாக இருக்கின்றன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget