பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்துள்ள படம் 'அட்றா மச்சான் விசிலு'. இதில் அவர் பிரபல நடிகராக நடித்துள்ளார். அவரது ரசிகர் மன்றத் தலைவராக சிவா நடித்துள்ளார். வருகிற ஜூலை 7ந் தேதி
வெளிவருகிறது. படத்தில் நடித்தது பற்றி சீனிவாசன் கூறியதாவது:
இந்தப் படத்தில் வித்தியாசமா பண்ணிருக்கேன்.. மத்தபடி காமெடிப்படம்ங்கிறதால ஸ்டைல்னு தனியா ஏதும் பண்ணல.. ஆனா எக்கச்சக்க 'பஞ்ச்க் இருக்கு. இந்தப்படம் வெளியாச்சுன்னா இனி குழந்தைகள் பேசுறது எல்லாம் நம்ம பஞ்ச்சாத்தான் இருக்கும்னா பாத்துக்குங்க..
என்னோட லட்சியம்னு பார்த்தீங்கன்னா அனுஷ்கா கூடவும் த்ரிஷா கூடவும் ஹீரோவா நடிக்கனுங்கிறதுதான்.. இந்தப்படத்தோட தயாரிப்பாளர் கோபி கூட என்னோட அடுத்த படத்துக்காக அனுஷ்கா கிட்டேயும் த்ரிஷா கிட்டேயும் பேசிக்கிட்டு இருக்கிறார்.. அவங்க கிடைக்காட்டியும் கூட, அவங்க பேர்ல உள்ள பெண்களையாவது ஹீரோயினா கமிட் பண்ணுங்கன்னு சொல்லி வச்சிருக்கேன்..
படத்துல சூப்பர்ஸ்டார் கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.. ஆனால் ஒரு ஹீரோயின் கூட கொடுக்கல. இந்தப்படத்துலன்னு இல்ல.. எல்லா படத்துலயும் ஹீரோயின் மட்டும் தரவே மாட்டேங்கிறாங்க.. ஐட்டம் சாங்கா தர்றாங்க.. ஆனா தனியா ஆடவிட்டுடுறாங்க.. என்ன சார் வெறும் ட்ராக்காவே முடிச்சிடுறீங்களேன்னு கேட்டா, சார் உங்களுக்காகவே தனியா பாட்டு வச்சிருக்கோம், அத பாருங்க சார்னு நம்மள சமாளிச்சு அனுப்பிடுறாங்க.. என்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

கருத்துரையிடுக