கர்நாடகத்தை சேர்ந்தவரான சங்கவி, தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக அமராவதி படத்தில் அறிமுகமானவர் பின்னர் விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ள போன்ற படங்களில் நடித்தவருக்கு கே.எஸ்.ரவிக்குமாரின்
நாட்டாமையும் பெரிய ரீச்சைக் கொடுத்தது. அப்படி தொடங்கிய அவரது சினிமா பயணம் 2005-ம் ஆண்டு வரை விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது. பின்னர் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே கேரக்டர் நடிகையாக உருவெடுத்தார் சங்கவி. அந்த வகையில் இதுவரை 80 படங்களில் நடித்துள்ளார் அவர்.
இந்நிலையில், இந்த ஆண்டு (2016) பிப்ரவரியில் பெங்களூரைச்சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து என் கணவர் நான் தொடர்ந்து நடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டார் என்றும் செய்தி வெளியிட்ட சங்கவிக்கு தற்போது தமிழில் மூடர் கூடம் நவீன் இயக்கும் கொளஞ்சி என்ற படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து எந்தமாதிரியான கேரக்டர்களில் நடிக்கவும் தயார் என்று கூறியுள்ள சங்கவி, தனது அபிமான டைரக்டர்களை தொடர்பு கொண்டு மீண்டும் தான் நடிக்க வந்திருப்பதை தெரியப்படுத்தி வருகிறார்.

கருத்துரையிடுக