கலர் தெரபி பற்றி தெரியுமா

வானவில் பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா? வரிசை மாறாத அந்த வண்ணச் சிதறல், பார்க்கப் பார்க்க அத்தனை அழகல்லவா? மனித உடலுக்குள்ளும் ஒரு வானவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? யெஸ்... நம்முடைய
ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ‘சக்ரா’ எனப்படுகிற அழுத்தப்புள்ளிகள் இருக்குமாம். முக்கியமான அந்த 7 சக்ரங்களையும் தூண்டும்போது, அது ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்துமாம். அந்த ஒவ்வொரு சக்ரத்துக்கும் ஒரு வண்ணம் உண்டாம். மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த அந்த வண்ணங்களுக்கு, அழகுத் துறையிலும் பெரும்பங்குண்டு என்பது பிரமிக்க வைக்கிறது.

‘‘சஹஸ்ரார சக்ரா, அஞ்யா சக்ரா, விசுத் சக்ரா, அனாஹதா சக்ரா, மணிப்புரா சக்ரா, ஸ்வாதிஷ்டான சக்ரா, மூலாதார சக்ரா-ன்னு நம்ம உடம்புல 7 சக்ரா உண்டு. உச்சந்தலைலேருந்து, ஆசன வாய் வரைக்கும் உடம்போட ஒவ்வொரு பகுதியோடவும் தொடர்புள்ள இந்த ஏழும், வயலட், இன்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்புன்னு வானவில்லோட 7 கலர்களை, அதே வரிசையில கொண்டதா இருக்கு. ஒவ்வொரு கலருக்கும் ஒரு மருத்துவ குணமும் உள்ளதா சொல்லப்படுது. இதை அடிப்படையா வச்சுதான், பார்லர்ல சக்ரா மசாஜ் பண்றோம். வாடிக்கையாளரை குப்புறப் படுக்கச் சொல்லி, அழுத்தப் புள்ளிகளைப் பார்த்து மசாஜ் செய்வோம். மசாஜ் முடிஞ்சதும், ஒவ்வொரு சக்ராவுக்கும் ஏத்தபடி, அந்தந்த கலர்ல பேக் போடுவோம். பக்கத்துல நின்னு பார்க்கிறப்ப, இது வானவில் மாதிரியே இருக்கும். வெளிநாடுகள்ல ‘கலர் தெரபி’ ரொம்பப் பிரபலம். 

அழகு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு பிரத்யேக கலர்கள்ல லைட் இருக்கு. கூந்தல் பிரச்னைக்கு பச்சை கலர், முகத்துக்கு சிவப்பு கலர், கழுத்துப் பகுதி டைட் ஆக நீல கலர் லைட்... இன்னும் இப்படி நிறைய இருக்கு. மெஷின் மூலமா அந்த லைட்டை காட்டும் போதே, பலனை உணர முடியும். இந்த சிகிச்சை இப்ப நம்மூர்லயும் பிரபலமாக ஆரம்பிச்சிருக்கு. யாருக்கு என்ன பிரச்னைன்னு பார்த்து, மசாஜ் அல்லது ஃபேஷியலோட சேர்த்து, இந்த லைட்டையும் காட்டணும். பக்க விளைவுகள் இல்லாத இந்த வெளிச்சத்துலேருந்து கெடுதலான வேற எதுவும் உமிழப்படறதில்லை.

அடுத்தது பூக்கள் வச்சு பண்ற இன்னொரு விதமான கலர் தெரபி. சிவப்பு ரோஜாவுக்கு மனசை அமைதிப்படுத்தற குணம் உண்டு. அது எல்லாவிதமான சருமங்களுக்கும் பொருந்தும். சருமத்தை மிருதுவாக்கும். தலை, உடம்புக்கான சிகிச்சைகள்லயும், பெடிக்யூர்லயும் உபயோகிக்கிறோம்.சம்பங்கிப் பூவோட வெள்ளை நிறமும் மனதை அமைதிப்படுத்தும். மஞ்சள் நிற சாமந்தி, அலர்ஜிக்கு நல்லது. சருமத்தை மென்மையாக்கி, புண்ணை ஆற்றும்.

அது மட்டுமா?

கரியிலேருந்துதான் வைரம் எடுக்கறோம். அந்தக் கரிக்கு, சருமத்தை அழகுப்படுத்தற குணம் உண்டு. சார்கோல் ஃபேஷியல்னே ஒண்ணு இருக்கு தெரியுமா? கருப்பு நிற சார்கோல் மாஸ்க், சருமத்தை சுத்திகரிச்சு, பளீர்னு மாற்றும்.பிரவுன் நிற ஒயின் தெரபி, சரும நிறத்தை அதிகரிக்கும். மஞ்சள் மிகச் சிறந்த ஆன்டிசெப்டிக். பச்சை நிற கடல்பாசி, சருமம் வழியா, உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை கொடுத்து, நிறத்தைக் கூட்டும்.
சமீப காலமா கலர் வாக்ஸ் தெரபியும் பிரபலமாயிட்டு வருது. கை, கால் சொரசொரப்பை நீக்க செர்ரி வாக்ஸ், பாத வெடிப்புக்கு ரோஸ் வாக்ஸ், புத்துணர்வுக்கு ஸ்ட்ராபெர்ரி வாக்ஸ்னு நிறைய இருக்கு. தேவையில்லாத ரோமங்களை நீக்கப் பயன்படற வாக்ஸ்லயும், இது மாதிரி நிறைய கலர்களும் வாசனைகளும் வந்திருக்கு. கற்றாழை, பழங்கள்னு இயற்கையான பொருள்களோட சாரத்துலேருந்து தயாரிக்கப் படறதால, பக்க விளைவுகள் இருக்கிறதில்லை!’’
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget