டாட்டூ மோகம்

பழையன கழிதலும் புதியன புகுதலும்...
இது சமீப காலமாக உல்டாவாகி, புதியன கழிதலும் பழையன புகுதலும் என்றாகிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு புழக்கத்தில் இருந்து,
காலப்போக்கில் கைவிடப்பட்டு காலாவதியான விஷயங்கள் எல்லாம் இப்போது புதுமை என்ற பெயரில் புனர் ஜென்மம் எடுத்து வருகின்றன. இன்றைக்கு இளைஞர்கள், இளைஞர்கள் மத்தியில் படு பாப்புலராக இருக்கும் டாட்டூ அவற்றில் ஒன்று!

அதென்ன டாட்டூ?

நரிக்குறவ இனத்தவர்களின் கைவந்த கலையாக இருந்த பச்சைக்குத்துவதுதான் இன்றைக்கு டாட்டூவாக நவீன அவதாரமெடுத்திருக்கிறது. இளையோர் மத்தியில் டாட்டூ கலாசாரம் தீயாகப் பற்றி எரிய, வழக்கம்போல சினிமா நட்சத்திரங்களே காரணமாக இருக்கிறார்கள். இடது பக்க மார்பகத்தில் தனது விருப்பமான கார்ட்டூன் கேரக்டரான நீமோவை டாட்டூ போட்டுக் கொண்ட த்ரிஷாவுக்கு அது ரொம்பவே லக்கியாம்! கூடிய விரைவில் இன்னொரு டாட்டூவுக்கு தயாராகிற த்ரிஷாவின் சாய்ஸ் கணுக்கால் ஏரியா!

தனது பெயரையே வலது பக்க பின்புறத் தோள்பட்டையில் டாட்டூவாக எழுதிக் கொண்டிருக்கிறார் நடிகை ஷ்ருதி. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ’ என இந்தி எழுத்துகளில் தோள்பட்டையில் டாட்டூ போட்டிருப்பவர் மம்தா மோகன்தாஸ். முதுகில் மயில், வலக்கையில் பட்டாம்பூச்சி, இடது கையில்  தனது மகள்கள் அவந்திகா, அனந்திகாவின் பெயர்களை தமிழ், ஆங்கிலம் கலந்து எழுதியிருக்கிற டாட்டூ என சமீப காலமாக கவனம் ஈர்க்கிறார் நடிகை குஷ்பு.

முதுகில் ஒன்றும், கணுக்காலில் ஒன்றுமாக  2 டாட்டூக்களுக்கு சொந்தக்காரர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.   நடிகை ஐஸ்வர்யாவின் உடலில் ஒன்பது டாட்டூ! மிதுன ராசியைக் குறிக்கும் சின்னம், பாட்டி, அம்மா, தான், தன் மகள் என நால்வரின் பெயர்களின் முதலெழுத்தைக் குறிக்கும் RLSA , மகள் அனைனாவின் பெயர், ஃபீனிக்ஸ் பறவை, புற்றுநோயால் பாட்டி இறந்ததன் நினைவாக, கருப்பு ரோஜாவுடனான ரிப்பன்... இப்படி இன்னும் பல... ‘‘டாட்டூ போடணுங்கிறது என்னோட ரொம்ப வருஷ ஆசை. 

ஆனா என் பொண்ணுக்கு அதுல கொஞ்சமும் விருப்பமில்லை. வருஷக்கணக்கா கெஞ்சி, ‘ஒரே ஒரு டாட்டூ, அதுவும் என் ராசி சின்னத்தை மட்டும் போட்டுக்கறேம்மா’ன்னு கஷ்டப்பட்டு சம்மதிக்க வச்சு, முதல் டாட்டூ போட்டுக்கிட்டேன். அப்புறம் அப்படியே, ஒவ்வொண்ணா அதிகமாகி, இப்ப 9 டாட்டூ இருக்கு. இதுக்கு மேல போடறதுக்கு என் பொண்ணே அனுமதிக்க மாட்டா. உடம்புலேயும் இடமிருக்காது’’ என்கிற ஐஸ்வர்யா, டாட்டூவை மன உணர்வுகளின் பிரதிபலிப்பாக நினைக்கிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget