பேயைக்கண்டு அஞ்சி நடுங்கும் நிக்கி கல்ராணி

மிருகம், ஈரம் படங்களில் நடித்த ஆதியின் மார்க்கெட் அரவாண் படத்தில் தோல்வியினால் வீழ்ச்சி கண்டது. அதனால் சில ஆண்டுகள் காணாமல் போயிருந்தவர், தனது அண்ணன் சத்ய
பிரபாஸ் இயக்கிய யாகவராயினும் நாகாக்க படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் தோல்வியடைந்தது. அதனால் ஆதிக்கு தமிழில் புதிய படமில்லை. அதையடுத்து தெலுங்கிற்கு சென்று சில படங்களில் வில்லனாக நடித்தவர், இப்போதும் சில படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

ஆனால் தமிழில் சரவணன் இயக்கும் புதிய படத்தில் இப்போது அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தில் யாகவராயினும் நாகாக்க படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணியே மீண்டும் ஜோடியாகியிருக்கிறார். இந்த படம் காமெடி பேய் கதையில் உருவாகிறது. ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் அதிரடி பேயாக நடித்த நிக்கி கல்ராணிக்கு இந்த படத்தில் பேயைக்கண்டு அஞ்சி நடுநடுங்கும் வேடமாம். டார்லிங்கில் அவர் நடித்தது போன்ற ஒரு பயங்கரமான பேய்தான் இந்த படத்தில் நிக்கி கல்ராணியை மிரட்டுகிறதாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget