சரித்திர படத்தில் மிரட்டும் அனுஷ்கா

அனுஷ்காவிற்கும் சரித்திரப் படத்திற்கும் அப்படி ஒரு ராசி. அவரது ஆறடி உயரமும், கம்பீர தோற்றமும் அவருக்கு அந்த வாய்ப்பை பெற்றுத் தருகிறது. 'அருந்ததி' பேய் படமாக இருந்தாலும்
அதில் கற்பனையான மன்னர் கதை ஒன்று இருந்தது. அதில் இளவரசியாக நடித்தார். அதன் பிறகு 'பாகுபலி'யில் மகிழ்மதி தேசத்து ராணியாக நடித்தார். அதன் பிறகு ஆந்திராவில் வாழ்ந்த 'ருத்ரமாதேவி' என்ற மகராணியாக நடித்தார். தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'ஓம் நமோ வெங்கடேசா' என்ற சரித்திரப்படத்தில் நடிக்கிறார். இது 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருமாள் பக்தரான பாபா ஹாதிராம் வாழ்க்கையை மையமாக கொண்ட படம். இதில் பாபா ஹாதிராமாக நாகார்ஜுனா நடிக்கிறார். பெருமாளின் தீவிர பக்தையாக அனுஷ்கா நடிக்கிறார். இதில் அருந்ததி மகாராணியோ, இளவரசியோ அல்ல அந்த காலத்து சாதாரண பெண்ணாக நடிக்கிறார். இதற்காக அனுஷ்காவின் தோற்றத்தை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஜூலையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget