நடிகை தன்ஷிகா தற்போது 'கபாலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். கபாலி படத்திற்காக அவர் தன் தலைமுடியை குறைத்து பாப் வெட்டியுள்ளார். அடுத்து அவர் சமுத்திரகனியின் 'கிட்ணா' படத்தில்
நடிக்க வேண்டும். அதற்கு தலைமுடி வளர காத்திருக்கிறார். இப்போது இதே கபாலி ஹேர் ஸ்டைலுடனேய ஒரு படத்தை எடுத்து முடிக்க முன்வந்திருக்கிறார் சமுத்திரகனியிடம் இணை இயக்குனராக இருந்த எஸ்.பாணி.
படத்துக்கு 'ராணி' என்று பெயர் வைத்திருக்கிறார். ஹீரோ இன்னும் முடிவாகவில்லை. ஆனால் இது ஹீரோயின் சப்ஜெக்ட். தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவிற்கு செல்லும் ராணிக்கு அங்கு ஒரு அநீதி இழைக்கப்படுகிறது. அவளை போல பல பெண்கள் அங்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி ராணி மீட்கிறாள் என்கிற அதிரடி ஆக்ஷன் படம் என்கிறார்கள். ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து திரும்ப விரைவில் படக்குழு மலேசியாக கிளம்புகிறது.
படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார், ஏ.குமரன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜை திருவண்ணாமலையில் எளிமையாக நடந்தது. இளையராஜா கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தார். 'கபாலி' படம் வெளிவந்ததும். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்தப் படத்தை திரையிட திட்டம் வைத்திருக்கிறார்கள்.

கருத்துரையிடுக