பிரிட்டன் வெளியேரியத்தால் இந்தியாவுக்கு பாதிப்பா

மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து ஓட்டெடுப்பில், அமோக ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன்
வெளியேறுகிறது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.

கடந்த, 43 ஆண்டுகளாக, 28 நாடுகள் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய கூட்டமைப்பில், பிரிட்டனும் உறுப்பினராக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என, பிரிட்டனில் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன; பல்வேறு அமைப்புகளும் இதை வலியுறுத்தி வந்தன.

மீண்டும் பிரதமரானால், மக்களின் கருத்தை கேட்கும் ஓட்டெடுப்பை நடத்துவதாக, கடந்த, 2013ல் அறிவித்தார், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சி வென்று, கேமரூன் மீண்டும் பிரதமரானார். அதன்படி, கருத்து ஓட்டெடுப்பு நடத்துவதற்கான மசோதா, பிரிட்டன் பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஜூன், 23ல், கருத்து ஓட்டெடுப்பு நடத்தப்படும் என, கடந்த பிப்ரவரியில் கேமரூன் அறிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று முன்தினம் மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் நேற்று காலை வெளியாகின. அதில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு, 52 சதவீத மக்கள் ஆதரவு அளித்திருந்தனர்; தொடர வேண்டும் என, 48 சதவீத மக்கள் ஓட்டளித்தனர். கேமரூன் ராஜினாமா : ஐரோப்பிய யூனிய னில் தொடர வேண்டும் என, வலியுறுத்தி வந்த பிரதமர் கேமரூன், இந்த ஓட்டெடுப்பு முடிவுகள் வெளியானதும், வரும் ஆகஸ்ட் மாதத்தில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறு வதற்கான நடவடிக்கை களை, புதிதாக வரும் பிரதமர் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக் கைகள் முடிய, இரண்டு ஆண்டுகள் ஆகும் எனத் தெரிகிறது. ஓட்டெடுப்பு முடிவுகள் நேற்று காலை வெளியாகத் துவங்கிய நிலையில், பிரிட்டனின் பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது;

அமெரிக்க டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்ட் மதிப்பு, கடந்த, 31 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. இதன் பாதிப்பு, பல்வேறு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. மந்தமான பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை அதிகரித்தல், அகதிகள் பிரச்னை, கிரீஸ் நாட்டின் கடன் பிரச்னைகள், உக்ரைனின் உள்நாட்டு போர் என, பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் ஐரோப்பிய யூனியனுக்கு, பிரிட்டன் வெளியேறுவது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பங்குச் சந்தையில் வீழ்ச்சி : 1.79 லட்சம் கோடி 'அவுட்'பிரிட்டன் முடிவால், நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை

சந்தித்தன. காலையில் வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்க ளில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளின் மொத்த மதிப்பு, நான்கு லட்சம் கோடி குறைந்து, 98 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' 1,058 புள்ளிகளுக்கும் மேலாக சரிவடைந்து, முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதையடுத்து, 'எத்தகைய தாக்கத்தையும் சமாளிக்கும் வகையில், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை காரணிகள் வலுவாக உள்ளன' என்று, நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கைகள் வெளியாகின. அதேசமயம், பொது துறை நிறுவனங்கள் பங்கு முதலீடு மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டன. இதன் விளைவாக, பங்குச் சந்தைகள் சரிவில்இருந்து சற்று மீண்டன. பங்குச் சந்தை வர்த்தகத்தின் முடிவில், பட்டியலிடப்பட்ட பங்குகளின் மொத்த மதிப்பில் ஏற்பட்ட இழப்பு, 1.79 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு குறைந்தது.

ரூபாய் மதிப்பு சரிவு : நேற்று காலை, அன்னியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 96 காசுகள் வரை சரிவடைந்தது.இதையடுத்து, ரிசர்வ் வங்கி, உடனடியாக வங்கிகள் மூலம் அதிக அளவில் டாலரை வாங்கியது. இதனால், ரூபாய் மதிப்பு, சரிவில் இருந்து மீண்டது. வர்த்தகத்தின் இறுதியில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 71 காசுகள் குறைந்து, 67 ரூபாய், 96 காசுகள் என்ற அளவில் இருந்தது.

1975ம், 2016ம் ஐரோப்பிய கூட்டமைப்பில், கடந்த, 1973ல் பிரிட்டன் சேர்ந்தது. அப்போது, ஐரோப்பிய பொருளாதார கம்யூனிட்டி என்ற பெயரில் அது இருந்தது.பிரிட்டனில், இதுவரை, மூன்று முறை பொதுமக்களின் கருத்தை கேட்கும் ஓட்டெடுப்பு நடந்துள்ளது. முதலாவதாக நடந்த ஓட்டெடுப்பு, 1975ல் நடந்தது. ஐரோப்பிய பொருளாதார கம்யூனிட்டி உறுப்பினராக தொடரலாமா என்பதற்காக நடத்தப்பட்ட அந்த கருத்து ஓட்டெடுப்பில், தொடருவதற்கு ஆதரவாக, 67.2 சதவீத மக்கள் ஓட்டளித்தனர்; 32.8 சதவீத மக்கள் எதிர்ப்புதெரிவித்திருந்தனர். தற்போது, ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடரலாமா, என்பதற்கான ஓட்டெடுப்பில், வெளியேறுவதற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அகதிகள் பிரச்னை : ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள நாடுகள், அகதிகள் பிரச்னையால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. சிரியா, ஈராக் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஐரோப்பிய யூனியனுக்கு ஏராளமானோர் அகதிகளாக வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும், பிரிட்டனுக்கு 3.30 லட்சம் பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

இதில், பாதி பேர் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் இருந்து வந்த வர்கள். அகதிகளின் வருகையால், பிரிட்டனின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், குடியிருப்பு என, பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. அகதிகளாக வந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களாக உள்ளனர். அவர்கள் பிரிட்டனை ஆக்கிரமித்து வருவதாகவும் பிரச்னைகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, ஐரோப்பியகூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்ற வாதம், பிரிட்டனில் தீவிரமாக ஒலிக்கத் துவங்கியது.பார்லி.,யில் நிறைவேற்ற வேண்டும் :

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் முதல் நாடு பிரிட்டன்ஓட்டெடுப்பில் வெளியேற வேண்டும் என்று மக்கள் அளித்த கருத்தை, பார்லிமென்டில் நிறை வேற்ற வேண்டும்அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனின், ஆர்டிகிள், 50 எனப்படும் பிரிவின்படி, மற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்பெரும்பாலான நாடுகளின் ஆதரவு கிடைத்தால் தான் வெளியேற முடியும்இந்த நடவடிக்கைகளுக்கு இரண்டுஆண்டுகள் ஆகும் என, எதிர்பார்க்கப் படுகிறதுஇரண்டு ஆண்டுகளுக்குள் முடிவு எடுக்கப் படாவிட்டால், பிரிட்டன் தாமாகவே வெளி யேறலாம் அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டு களுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பி னராகத்தான் பிரிட்டன் இருக்கும்அவ்வாறு வெளியேறி விட்டால், மீண்டும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைய வேண்டுமானால், உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கடந்துவந்த பாதை
2013, ஜன., 22
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்வதா; வேண்டாமா என்பது பற்றி மக்களின் கருத்துகளை அறிய, பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது.
2015 மே 27மீண்டும் ஆட்சியை பிடித்தது, கன்சர்வேடிவ் கட்சி. இதையடுத்து, பொது ஓட்டெடுப்பு பற்றிய அறிவிப்பை பிரிட்டன் ராணி வெளியிட்டார்
டிச., 17, 18பொது ஓட்டெடுப்பு மற்றும் சீர்திருத்தம் குறித்து, இங்கிலாந்து தலைவர்கள் விவாதித்தனர்
2016 பிப்., 3சீர்திருத்தம் தொடர்பான திட்டத்தை, பிரிட்டன் பார்லிமென்டில், பிரதமர் டேவிட் கேமரூன் தாக்கல் செய்தார்
பிப்., 18, 19கேமரூனின் ஓட்டெடுப்பு மற்றும் சீர்திருத்த திட்டம் குறித்து, பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் உள்ள ஐரோப்பிய கூட்டமைப்பில் விவாதிக்கப்பட்டது. இதற்கு மற்ற, 27 நாடுகளும் ஆதரவு அளித்தன
பிப்., 20
இதையடுத்து பொதுஓட்டெடுப்பு ஜூன், 23ல் நடைபெறும், என கேமரூன் அறிவிப்பு
ஜூன், 16சீர்திருத்தம் தொடர்பாக தீவிர பிரசாரம் செய்து வந்த, தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி., ஜோ காக்ஸ், சுட்டுக்கொலை
ஜூன், 23பிரிட்டன் மக்கள் ஓட்டெடுப்பு மையங்களுக்கு சென்று, 'ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர் வதா; வேண்டாமா' என்பதற்கான ஓட்டு அளித்தனர்
ஜூன், 24பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ஐரோப்பிய கூட்ட மைப்பை விட்டு, பிரிட்டன் வெளியேற வேண்டும் என, 52 சதவீத மக்கள்ஓட்டளித்தனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget