பீல் பண்ணும் ஹன்சிகா

இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகாவுக்கு அங்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கில் கதாநாயகியான அவர், பின்னர் மாப்பிள்ளை
படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழுக்கு வந்தார். அதையடுத்து ஜெயம்ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்தவர் மூன்றாவது படத்திலேயே விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்தார். ஆக, தமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்தார் ஹன்சிகா. பின்னர் வாலு படத்தில் நடித்த போது சிம்புவுடன் காதலில் விழுந்தார். அப்போது அவரது மார்க்கெட் சரியும் நிலையில் இருந்தது. என்றாலும், ஓரிரு மாதத்திலேயே, சிம்புக்கும், எனக்குமிடையே எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டார் ஹன்சிகா.

அதன்பிறகு அரண்மனை, அரண்மனை-2, போக்கிரிராஜா, உயிரே உயிரே, மனிதன் என பல படங்களில் நடித்தார். ஆனபோதும், தற்போது அவர் கைவசம் போகன் படம் மட்டுமே உள்ளது. அடுத்தபடியாக படங்கள் இல்லை. அதனால் நயன்தாரா, திரிஷா பாணியில் கதையின் நாயகியாக ட்ராக்கை மாற்ற நினைத் தார் ஹன்சிகா. அதனால் நயன்தாரா, திரிஷாவின் கால்சீட்டுக்காக காத்திருக்கம் சில டைரக்டர்களை தொடர்பு கொண்டு, அந்த கதைகளில் தான் குறைந்த சம்பளத்தில் நடிக்க தயாராக இருப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், ஹன்சிகாவின் தற்போதைய மார்க்கெட் நிலவரத்தை கருத்தில் கொண்டு அவரை கதையின் நாயகியாக வைத்து படமெடுத்தால் வியாபாரம் கேள்விக்குறியாக இருக்கும் என்று யாரும் பிடிகொடுக்கவில்லை. அதனால் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget