வீ ட்டின் மூலையில் ஒரு சமையலறை என்பது போலத்தான், எவ்வித முக்கியத்துவமும் இல்லாமல் இருந்தது ஒரு காலகட்டம். இப்போதே புதிது புதிதாக அறிமுகமாகும் சமையலறை உபகரணங்கள் அதன் முகத்தையே மாற்றி
வருகின்றன. அது மட்டுமல்ல... வரவேற்பறை, படுக்கையறை என வாழும் அறைகளுக்குத் தருகிற அதே அளவு முக்கியத்துவத்தை சமையலறைகளும் பெற்று வருகின்றன. உதாரணம்... மார்க்கெட்டில் அறிமுகமாகியிருக்கும் கிச்சனுக்கான பிரத்யேக ஏசி. இப்படி எல்லா மாற்றங்களையும் தன்னகத்தே உள்வாங்கும் இதன் ஈடில்லா அமைப்புதான் மாடுலர் கிச்சன்!
‘மாடுலர் கிச்சன் பற்றி எழுதப் போகிறேன்’ என்றதும் இன்ஸ்பையர் இன்டீரியர் நிறுவனத்தின் தலைவர்களும், தம்பதி சகிதமாக தொழிலில் கலக்கிக் கொண்டிருக்கும் வினோத், அம்பிகா விவரங்கள் அளிக்க முன் வந்தனர். முதலில் மாடுலர் கிச்சன் என்றால் என்ன? எந்தவொரு மேடையும் முன்பே போடாமல் தேவைக்கு ஏற்ப வசதியாக, மாடர்னாக வடிவமைத்தால் அதற்குப் பெயர் மாடுலர் கிச்சன்.
மேடை, லாஃப்ட் எனப்படும் கான்க்ரீட் பரண் எல்லாம் அமைந்த சமையல் அறை என்றால் அது
மாடுலர் கிச்சன் என்ற கணக்கில் வராது. வெறும் சமையல் அறையை இன்டீரியர் வேலைகளுக்கு அப்படியே விட்டுவிடுவதே மாடுலர் வடிவமைப்பில் பெரும்பாலும் நடக்கிறது. சிலர் தச்சர் வைத்துக்கொண்டு செய்வதும் உண்டு. பொதுவாக, மாடுலர் என்றாலே ரெடிமேடாகவோ, இன்டீரியர் டிசைனர் செய்வதோ இப்போது நிறைய இடங்களில் பாப்புலர். சிறிய இடத்தைக் கூட பல விதங்களில் இங்கு வடிவமைக்க முடியும்.
ஏன் மாடுலர் சமையலறை தேவை?
இந்தியாவை பொறுத்த வரை பெரும்பாலும் மூன்று வேலைகளும் சமைத்து சாப்பிடுகிறோம். அதைத் தவிர விருந்தினர் வருகை, தேவையான பாத்திரங்கள், பழைய பாத்திரங்கள், ஊறுகாய், வடாம், பொடி போன்று நாள்பட வைத்திருக்கும் பொருட்கள் என்று சமையல் அறையில் வைத்து இருக்க வேண்டிய பொருட்களின் பட்டியல் மிகப்பெரிது. இப்போதைய காலகட்டத்தில் அபார்ட்மென்ட் கட்டிடங்களில் ஏழுக்கு எட்டு, பத்துக்கு ஏழு போன்ற சிறிய அளவுகளில் மட்டுமே
சமையலறை வைக்கிறார்கள்.
இப்படி சிறிய அளவோ, பெரிய அளவோ... இடம் விற்கும் விலையில் இருக்கும் இடத்தை முழுக்க உபயோகிக்க வேண்டிய தேவை உள்ளது. வெறும் கடப்பா கல் அல்லது நாலு கிரானைட் செருகிய சமையல் அறையில் இந்தளவுக்குத் திட்டமிட்டு எல்லா பொருட்களையும் சிறிது இடத்திலேயே அடுக்க முடியாது. திறந்து இருப்பதால் தூசி வேறு படியும். நீர் கறைகள் ஏற்படும். அடுத்துப் போதுமான அளவு இடத்தை வசதியாக வைத்துக் கொள்ள முடியாது. சுத்தம் செய்யவும் நிறைய நேரம் தேவை. சில நேரம் தூசியால் தினம் துடைக்கும் வேலை வந்துவிடும்.
உண்மையை சொல்லப் போனால் நிறையப் பெண்கள் இன்னமும் மணிக்கணக்கில் சமையல் அறையில்தான் பொழுதைக் கழிக்கிறார்கள். எனவே சமைக்கும் இடம் விஸ்தாரமாக அமைவது அவசியம். சிலிண்டர் சரியான இடத்தில் வைக்க வேண்டும் என்றால், எண்ணெய் டப்பாக்கள் அடுப்புக்கு வலது கை பக்கத்தில் வைத்து அடிக்கடி எடுக்கும் வகையில் இருக்க வேண்டும். கரண்டி, ஸ்பூன் போடுவது அடுப்புக்கு மிக அருகில் வைக்க வேண்டும்.
அதற்குக் கீழே சின்ன பாத்திரங்கள், பிறகு பெரிய பாத்திரங்கள் என்று ஒவ்வொன்றையும் யோசனை செய்து வடிவமைக்க வேண்டும். அதே ஈர இடமான சிங்க் அருகே ஒரு கூடை வடிமைக்க வேண்டும். ஈரப் பகுதியில் அதாவது, சிங்க், அக்வா கார்டு இருக்கும் இடத்தில் இருந்து மின்சார சாதனங்கள் தள்ளி இருக்க வேண்டும். மாடுலர் என்றால் பலர் வெறும் அழகுக்கு என்று நினைக்கிறார்கள். ஆனால், உபயோகத்துக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கிறார்கள்... பல பொருட்கள் உள்ளே வைக்கவும், பயன்படுத்த மிக எளிதாகவும் ஏற்கனவே அதிக வேலைகள் இருக்கும் சமையல் அறையை வடிவமைப்பின் மூலம் வேலைகளை எளிதாக்கவும் மாடுலர் வடிவமைப்பு உதவும்.
மாடுலர் சமையலறை ஒருபக்கம், இருபக்கம்(பேரலல்), மூன்று பக்கம் (யூ வடிவம்), ஜி மற்றும் எல் வடிவம் மற்றும் தீவு அதாவது, ஐலேண்ட் வடிவம் என்று பல விதமாக வடிவமைக்க முடியும். எதுவாக இருந்தாலும் கட்டும் பொழுதே கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அபார்ட்மென்ட் வாங்கினாலோ, வீடு கட்டினாலோ சமையல் அறையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. சமையலறை மேடை பொதுவாக இரண்டரை அடி.
பெரும்பாலும் பெண்களின் சராசரி உயரம் ஐந்து, ஐந்தரை அடி இருப்பதால் இரண்டரை அடி மேடை பொருத்தமாக இருக்கும். தரையில் இருந்து முப்பது இஞ்ச் இருந்தால், அதற்கு மேல் அடுப்பு வைத்து சமைக்க எளிதாக இருக்கும். இதனால் குனியாமல், எம்பாமல் முதுகு வலிக்காமல் வேலை செய்ய ஏதுவான உயரம் இது.
அடுத்து பாத்திரம் கழுவும் தொட்டி எவர்சில்வர் அல்லது கிரானைட்டில் வைக்கும் போது மேடையை வெட்டி அதனுள் வைப்பார்கள். அப்போது கவனிக்க வேண்டிய விஷயம் மெட்டல் பேஸ்ட் அல்லது அரால்டைட் வைத்து சிங்க் மற்றும் மேடை இணைப்புப் பகுதியை ஒட்ட வைத்து விடுகிறார்கள். அதற்குப் பதிலாக சிலிகான் சீல் அதாவது, சீலன்ட் வைத்து ஒட்ட வைத்தால் தண்ணீர் ஒழுகாமல் இருக்கும். இது மேடை போடும்பொழுது நாம் பக்கத்தில் இருந்து கவனிக்க வேண்டிய விஷயம். ஏன் என்றால் நீர் கசிந்தால் இவ்வளவு செலவு செய்தும் பிரச்னையாகும்.
அடுத்து டைல்ஸ்...
மேடைக்கு மேல் பலர் சீலிங் வரை டைல்ஸ் பதித்து இருப்பார்கள். ஆனால், 2 அடி பதிக்க வேண்டியது மிக அவசியம். தரையில் இருந்து இரண்டரை அடி மேடை, அதற்கு மேல் டைல்ஸ் இரண்டு அடி, அதற்கு மேல் 2 அடி வால் யூனிட் எனப்படும் அலமாரிகள் வரும். சிலர் இரண்டரை அடி, 3 அடி டைல்ஸ் பதித்து விட்டு அதற்கு மேல் அலமாரி பொருத்தச் சொல்லுவார்கள். அப்படி செய்யும் போது உயரம் அதிகமாகிவிடுவதால், சரியான உபயோகம் இருக்காது. ஏன் என்றால் மொத்தம் ஆறரை அடிக்குள் அலமாரிகள் வந்துவிடுவதே பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே சொன்னது போல உபயோகிப்பாளரின் உயரம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
அடுத்து மின்சார ஸ்விட்ச் வைக்கும் போது நடுவில் இருக்கும் இரண்டடி டைல்ஸ் ஏரியாவில் வர வேண்டும். அதுவும் மிகக் கீழாகவோ இல்லை மேலாகவோ இல்லாமல் நடுவில் இருக்க வேண்டும். ஏன் என்றால் முன்பு போல அம்மி, ஆட்டுக்கல் இல்லை (இப்போது அதுவும் வைத்து கட்டிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அது விதி விலக்கு.). பெரும்பாலும் நாம் நிறைய மின் சாதனங்கள் வாங்க ஆரம்பித்து விட்டோம். வாங்கி குவித்துக் கொண்டும் இருக்கோம். அவை பெரும்பாலும் சமையல் அறையில் வைக்க வேண்டியது.
எனவே, கட்டும் பொழுது அக்வா கார்டுக்கு தனியாக மின் பாயின்ட், மைக்ரோ வேவ் அவன். இண்டக்சன் ஸ்டவ் இவற்றுக்கு நிரந்தரமாக 15 ஆம்ஸ் வைத்து விட வேண்டும். அதைத் தவிர கிரைண்டர், மிக்சி போன்றவை. இப்போது கேட்டில், காபி மேக்கர், சாண்ட்விச் மேக்கர், டோஸ்டர், எலக்ட்ரிக் குக்கர் போன்ற சாதனங்களும் உள்ளன. என்னைப் பொறுத்தவரை லேப் டாப் கூட எடுத்துச் சென்று விடுவேன். ரெசிபி பார்த்துக் கொண்டு சமைக்க மிக வசதியாக இருக்கிறது. அடுத்து வரும் இன்டீரியரிடம் லேப்டாப் வசதியுள்ள மாடுலர் கிச்சன் பற்றி சொல்ல வேண்டும்!
அடுத்து சிம்னி மற்றும் ஹாப்... குக்கிங் ரேஞ், ஹாப் போன்றவற்றுக்கும் மின் இணைப்பு தேவை. சிம்னி கூட கொடுத்து விடுகிறார்கள். ஆனால், ஹாப்புக்கு இணைப்பு இருப்பதில்லை. ஏன் என்றால், நாளை குக்கிங் ரேஞ் என்று முடிவெடுத்தால் டைல்ஸ் உடைத்து மின் இணைப்பு கொடுக்க வேண்டும். அடுத்து சிங்க் கீழே வெளிநாடுகள் போல கார்போ டிரையின் உபயோகிப்பாளர்கள் இருப்பார்கள். உணவுத் துகள்கள் அடைத்துக்கொள்வது மிகப்பெரிய பிரச்னை. இந்த கார்போ டிரயினில் மிக்சி போல எது போட்டாலும் கூழாக்கி வெளியே அனுப்பி விடும்.
எனவே, இங்கு ஒரு மின்சார பாயின்ட் இருப்பதும் நல்லது. கட்டின வீட்டை வாங்கும் போது எதுவும் செய்ய முடியாது. ஆனால், அபார்ட்மென்ட் கட்டிக்கொண்டு இருக்கும்போது நாம் பில்டரிடம் நம்முடைய சமையலறை பற்றி தெளிவாகத் தெரிவித்து விடுவது மிக நல்லது. ஏன் என்றால் கட்டிய பிறகு முழுக்க இடித்து செய்ய வேண்டி இருக்கிறது. நான் வாங்கிய வீட்டில் சிங்கை இடிக்குமாறு வடிவமைத்து இருந்தார்கள். சிலிண்டர் வைக்கும் இடம் வெளியே வைக்க வேண்டி இருந்தது. அதற்கு கேஸ் பைப் இணைப்பு தனியே கொடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் பிளான் செய்து அதை பில்டரிடம் தெரிவித்து விட வேண்டும். இல்லாவிடில் மேடை போடாமல் வெறும் கற்களை சும்மா வைத்துவிட்டுப் போகச் சொல்லிடலாம்!
பெண்கள் மட்டும் சமைப்பது என்பது மாறி வருகிறது. குழந்தைகளை கூட சின்னச் சின்ன வேலைகள் சொல்லி வளர்க்க வேண்டிய காலம். எனவே, ஒரு குடும்பம் சேர்ந்து நேரம் செலவு செய்யக்கூடிய அறையாக சமையல் அறையை வடிவமைப்பது நல்லது. ஏன் என்றால் ஒரு அழகுணர்ச்சியும் நேர்த்தியும் இருந்தால் மனதுக்கு சந்தோஷமாக இருக்கும். அறையில் இருந்து வரும் சமையலும் கூடுதல் சுவையாக இருக்கும்!
எப்படி லே அவுட் பார்ப்பது?
மரத்தின் வகைகள் போன்றவை பார்க்கும் முன், இன்டீரியர் ரெடிமேட் ஆக இருக்கலாம் அல்லது இன்டீரியர் டெகரேட்டர் ஆக இருக்கலாம் அல்லது தனிப்பட்ட முறையில் உள்ள தச்சராக இருக்கலாம். ஆனால், அவர்கள் முன்பே செய்து உள்ள இடங்களை பார்ப்பது மிக அவசியம். எப்படி உழைக்கிறது, தரமான பொருட்கள் போடுபவர்களா என்று விசாரிப்பது நல்லது. ஏன் என்றால் MDF, HDF, MEBARANE பிளைவுட், பார்டிகள் போர்டு எல்லாமே பல்வேறு தரத்தில் வந்து கொண்டு இருக்கின்றன. தரமானவற்றை பார்த்து கண்டுபிடிப்பது மிகக் கடினம்.
அடுத்து... இது செய்து விட்டு போகும் ஒரு நாள் வேலை அல்ல. நமக்கு கொஞ்ச நாள் கழித்து சர்வீஸுக்கு கூப்பிடும் நிர்பந்தம் ஏற்படும். அவர்களே வந்து செய்தால்தான் சரியாக வரும். அதுவும் நவீன பேட்ச் லாக் கதவுகளில் ஆரம்பகால பிரச்னைகள் வரும். இடம் மாற்றி வைக்க வேண்டிய தேவை வரலாம். எனவே, சர்வீஸ் பற்றியும் கவனத்தில் கொள்வது மிக நல்லது. இன்னும் சில பகுதிகள் மாடுலரோடு மாட்லாடலாம்!

கருத்துரையிடுக