‘முன்பு தண்ணீரால் சுத்தம் செய்தோம்... இப்பொழுது தண்ணீரையே சுத்தம் செய்கிறோம்...’- இணையத்தில் மேயும்போது ஈரோடு கதிர் என்னும் நண்பரின் பதிவுகளில் தட்டுபட்ட செய்தி இது. எத்தனை நிஜம்! இதற்காக எத்தனை கோடிகள் செலவாகிறது? இயற்கையை அழித்ததற்கு விலை
கொடுத்தது மட்டும் இல்லை... வட்டியும் தொடர்ந்து கட்டுகிறோம்.
ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்... முன்பு கடல் நீரை குடிநீராக்குவது பற்றி நிறைய ஆராய்ச்சிகள். அதில் வெற்றிப்பெற்றதுதான் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் - அதாவது, எதிர்ச் சவ்வூடு முறை. அதன் பிறகு அதை வீடுகளுக்கு உபயோகிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது. அதாவது, சவ்வு போன்ற ஒரு வடிகட்டி வழியாக, அதிக அழுத்தத்தில் நீர் செலுத்தப்படும். ஒரு சவ்வுத் துணி போன்ற அமைப்பு, அடுத்து ஒரு வலை, இன்னொரு சவ்வு என்று அடுக்கி வைக்கப்பட்டு, அது சப்பாத்தி ரோல் போல சுருட்டப்பட்டு கேண்டில் அமைப்பில் இருக்கும்.
அது வழியே உயரிய அழுத்தத்தில் நீர் ஊடுருவி செல்லும். அப்போது நீரில் உள்ள பாக்டீரியா, வைரஸ், ஆர்சனிக் போன்ற உடல்நலத்துக்கு கெடுதலான டாக்சிக் கெமிக்கல் மற்றும் உலோக நுண்துகள்கள் வடிக்கப்படும். முக்கியமாக ஈயம் என்கிற காரியம் - அதாவது, Lead விஷம் மிகக் கெடுதலானது. ஆர்சனிக், குரோமியம், காட்மியம், மெர்க்குரி போன்றவையும் நீரிலே கலந்து இருக்கும். அவையும் வடிக்கப்படும். இந்தச் சவ்வுகள் சிந்தடிக் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு இருக்கும். இவற்றில், மிகமிக நுண்ணிய மைக்ரான் அளவுள்ள துளைகளால் MF எனப்படும் மைக்ரோ ஃபில்ட்ரேஷன், UF எனப்படும் அல்ட்ரா ஃபில்ட்ரேஷன் மெம்ப்ரேன், NF என்கிற நானோ ஃபில்ட்ரேஷன் மெம்ப்ரேன் மற்றும் RO எனப்படும் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மெம்ப்ரேன் ஆகிய வகைகள் உள்ளன.
நீரிலுள்ள கடின உலோக நுண்துகள்கள் மிக ஆபத்தானவை. அவை புற்றுநோய், நரம்புத்தளர்ச்சி போன்றவற்றுக்கு வித்திடும். குழந்தைகளிடம் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். இப்போது இதுபோன்ற நிறைய மாசுகள் நீரில் கலப்பதால், ROக்கான தேவை அதிகரித்து உள்ளது. படத்தில் உள்ள படி முதலில் உள்ள வடிகட்டியில் பெரிய துகள்கள் வடிகட்டப்படும். அடுத்து RO பகுதிக்கு அழுத்தத்தில் நீர் செலுத்தப்படும். கடைசியாக சுத்தம் செய்யப்பட்டு குடிக்க நீர் தயாராகும்.
இதில் ஒரு பெரிய பின்னடைவு... பாதி அளவு நீர் கழிவாக வெளியேற்றப்படுவதும், அதை வேறு எதற்கும் உபயோகிக்க முடியாமல் வீணாவதும்தான். நீர் சேமிப்பு அவசியம் என்கிற இவ்வேளையில்
சுத்திகரிப்பு முறையில் நிறைய நீர் வீணாகச் செல்வதும் பிரச்னைதானே?
UV எனப்படும் புற ஊதா நீர் சுத்திகரிப்புஅல்ட்ரா வயலெட் டெக்னாலஜி... இது ஒரு நவீன முறை என்பதில்லை. காலம் காலமாக சூரிய ஒளியில் இருந்து பெறப்படுவதுதான். அந்த ஊதா நிற ஒளியில் நீரை செலுத்தும்போது பல கிருமிகள் இறந்து விடுகின்றன. இதன் மூலம் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகள் கொல்லப்படுகின்றன. இதில் எப்போதும் கீழிருந்து மேலாகவே நீர் செல்ல வேண்டும். புற ஊதா பல்ப் பொருத்தப்பட்டு இருக்கும்.
அதன் வழியே நீர் செல்கையில் காற்றுக்குமிழ்கள் எதுவும் இல்லாமல் இருப்பது நல்லது. அந்த விளக்கின் வெளிச்சத்தில் ஊடாக பாயப்பட்டு நீர் வரும்போது பல கிருமிகள் நீரில் இறந்திருக்கும். பல்ப் வாங்குவது என்று சொல்வார்களே... ‘கலர் கலரா வாங்கினேன்’ என்றும் சொல்வார்களே... இங்கோ பாக்டீரியாக்களுக்கே பல்ப் கொடுக்கிறோம். வைரசுக்கோ வெவ்வெவ்வே!
UF அல்ட்ரா ஃபில்ட்ரேஷன் மெம்ப்ரேன் நீர் சுத்திகரிப்பு
முன்பே பார்த்தவாறு இதுவும் சவ்வூடு பரவல் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. 0.2, 0.1 மைக்ரான் அளவுகளில் உள்ள துளைகள் மூலம் நீர் செல்லும்போது, நீரில் உள்ள அழுக்குகள், பல்வேறு கிருமிகள் வடிகட்டப்படுகின்றன. புவிஈர்ப்பு விசை மூலம் வேலை செய்யும் பல வித ஃபில்டர்கள் இப்படிச் செயல்படுகின்றன.
லைஃப் ஸ்ட்ரா
அவார்டு வாங்கிய நீர் சுத்திகரிப்பு முறை இது. எல்லா இடங்களிலும் ஃபில்டர் வைப்பதோ கிடைப்பதோ சாத்தியமில்லை. அதுபோன்ற இடங்களில் வரப்பிரசாதமாக இதை உபயோகிக்கலாம். மேல்நாடுகளில் மலையேற்றம் மற்றும் பயணங்களில் அவசர காலங்களுக்கு இதையே எடுத்துக் கொள்கிறார்கள். இதுவே மூன்றாம் உலக நாடுகளின் மக்களுக்கு இலவசமாக பல சேவை நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. ஹைதி விபத்து, தாய்லாந்து சுனாமி பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட போது, இவை மிகுந்த உபயோகமாக இருந்தன.
NF நானோ சுத்திரிப்பு முறை நீர் வடிகட்டி
இந்தியாவில் டாடா ஸ்வச் மூலம் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டன. சுனாமி பகுதியில் விநியோகிக்கப்பட்டு மிகுந்த பயன் தந்தது. இதன் விலை மிகக் குறைவே. நெல் உமிக்கரியை பக்குவப்படுத்தி நானோ துளைகள் (100 கோடியில் ஒரு பங்கு) ஏற்படுமாறு பக்குவப்படுத்தித் தயாரித்தனர். பாக்டீரியாக்களை அகற்ற சில்வர் பார்ட்களும் உபயோகப்படுத்தப் படுகின்றன. மின்சாரம் தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு மணி நேரத்துக்கு 3 லிட்டர் வரை சுத்திகரிக்கும்.
வாட்டர் ஃபில்டரை தேர்ந்தெடுப்பது எப்படி?
இட வசதி
முதலில் சமையலைறையில் பொருத்த இடம், மின்சார வசதி, குடிநீர் அமைப்பைத் தீர்மானிக்க வேண்டும். சுவரில் பொருத்தும் வகை வாங்கினால், சுவர் அந்த மாடலின் எடை தாங்குமா என்றும் பார்க்க வேண்டும். அதனால், வாங்கும் போதே எடையையும் கவனிக்க வேண்டும்.
வெளிப்புற அமைப்பு
நீர் சுத்திகரிக்கும் வடிகட்டியின் வெளிப்புற அமைப்பு நீண்ட காலத்துக்கு உழைப்பதாகவும், துருப் பிடிக்காத அமைப்பாகவும், சமையலறைக்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும். அலுமினியம், ஏ.பி.எஸ். அமைப்புடன் கிடைக்கின்றன.
நீர் தரம்
வீட்டில் நீரின் தரம் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக கடின நீர் TDS அளவு அதிகம் என்றால், அதற்கு ஏற்ற நீர் சுத்திகரிப்பு வடிகட்டி வாங்க வேண்டும்.
குழாய் அமைப்பு
சில வீடுகளில் எப்போதும் குழாயில் நீர் வராது. ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் மட்டுமே வரும். சிலருக்கோ வெளியில் இருந்து பிடித்து வைக்க வேண்டும். அதற்கேற்றவாறு வாங்க வேண்டும்.
விலை
நமக்கு கட்டுப்படியாகும் விலையில் உள்ளதா? அந்த விலையில் குறிப்பிட்ட வசதிகள் கிடைக்கின்றனவா? இவற்றையெல்லாம் வழக்கம்போல யோசிக்க வேண்டும்.
அக்வா கார்ட்
பல மாடல்களில் கிடைக்கிறது. UNESCOவின் 5 விருதுகள் பெற்றுள்ளது. நீர் சுத்திகரிப்பு மற்றும் கஸ்டமர் சர்வீஸ் இரண்டுக்கும் ஃப்ராஸ்ட் அண்ட் சுலிவன் அவார்ட் பெற்றுள்ளது. இதில் பெரும் குழப்பம் பலருக்கு உண்டு. Aqua sure, Aqua guard ஆகிய இரு கம்பெனிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று. முதலில் யுரேகா ஃபோர்ப்ஸ் மார்க்கெட்டில் இறங்கிய போது நேரடி விற்பனை மட்டும் ஆரம்பித்தார்கள். பிறகு இன்னும் விரிவாக விற்பனை செய்ய சில்லரை வியாபாரம் (Retail) எனப்படும் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. கடைகளில் விற்பனையாகும் மாடல்கள் அக்வா ஸ்யூர் என்ற பெயருடன் வெளிவந்தது.
தனிப்பட்ட முறையில் வீட்டுக்கே வந்து விற்கும் விற்பனையாளர்கள், வழக்கமான ஓரளவு தரமான பராமரிப்புச் சேவையுடன் உள்ளது அக்வா கார்ட். விலை குறைவான மாடல்களிலும் வந்து இருக்கிறது அக்வா ஸ்யூர். இதனால் இரண்டும் வெவ்வேறு அமைப்புகளில் வருகின்றன. டெக்னாலஜியில் பெரிதாக வித்தியாசம் இருக்காது.பல்வேறு மாடல்களில் வந்தாலும் இதன் நவீன மாடல் டாக்டர் அக்வா கார்ட் ஜெனசஸ். பல அடுக்குகளில் நீர் சுத்தம் செய்யப்பட்டு வெளிவருகிறது. RO, UF, UV முறைகளில் நீர் சுத்தம் செய்யப்படுகிறது.
கென்ட்
இதிலும் பல மாடல்கள் வருகின்றன. நேரடியாகக் குழாயில் இணைத்து இருக்கும் மாடல் உள்ளது. முக்கியமாக அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் போது பல் தேய்க்க, குளிக்க ஃபில்டர் நீர் உபயோகப்படுத்த முடியாது. அதற்கு குழாயில் இணைத்து வடிகட்டும் வசதி வந்துள்ளது. இதில் RO, UV, UF, TDS கன்ட்ரோல் எல்லாம் ஒரே மாடலில் இருப்பது போலவும் கிடைக்கிறது. UNESCOவின் 2 விருதுகள் மற்றும் கோல்டன் பீகாக் விருது ஆகியவற்றை சுற்றுச்சூழல் சார்ந்த கண்டுபிடிப்புக்காக வாங்கி இருக்கிறார்கள். நொய்டாவில் சிறிய அறையில் ஆரம்பித்த நிறுவனம், இன்று நீர் போல எங்கும் பாய்ந்த வண்ணம் உள்ளது.
எல்.ஜி.
44 ஆயிரம் ரூபாய்க்கும் கூட ஃபில்டர் இருக்கிறது. இதில் என்ன வசதி? 8 அடுக்குகளில் நீர் சுத்தம் செய்யப்பட்டு, குளிர்ந்தோ அல்லது சூடாகவோ உடனே கிடைக்கும். சூடாக வெந்நீர் குடிக்க அடுப்பையோ, ஜில்லென்று குடிக்க ஃப்ரிட்ஜையோ நாட தேவையில்லை. மாடல்களுக்கு ஏற்ப விலை வித்தியாசப்படுகிறது.சில மாடல்களில் தானே சுத்தம் செய்யும் முறை, எவர்சில்வர் நீர் பிடிக்கும் தொட்டி, 8 லிட்டர் கொள்ளளவு போன்ற கூடுதல் வசதிகள் உள்ளன.
ப்யூர் இட்
ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் இதை அறிமுகம் செய்தபோது பலத்த வரவேற்பு. 900 ரூபாய் என்கிற அடிப்படை வகை இப்போதும் கிடைக்கிறது. புதிய மாடல்களில் நிறைய வசதிகள் உள்ளன.
1. மேலே உள்ள வலையில் அழுக்குகள் நீக்கப்படுகிறது.
2. கார்பன் வலை: இது வழியாக நீர் செல்லும்போது சில கிருமிகள் நீக்கப்படுகின்றன.
குளோரின் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும்போது இன்னும் கிருமிகள் கொல்லப்படுகின்றன.கடைசியாக உள்ள பாலிஷர், நீரில் உள்ள குளோரின் மற்றும் வேறு அசுத்தங்களை நீக்கி சுத்தம் செய்து வெளியே அனுப்புகிறது. விலை ரூ.2,800 முதல். இன்னும் நிறைய வகைகள் கிடைக்கின்றன.
ஸீரோ பி
குழாயில் இணைக்கும் வடிகட்டியை அறிமுகப்படுத்தியதில் இவர்கள் முன்னோடி. இதன் விலை தோராயமாக 400 ரூபாய். 36 ஆயிரம் ரூபாய்க்கும் ஆர்.ஓ. கிடைக்கிறது.
டாடா ஸ்வச்
‘ஸ்வச் பாரத்’ என்றால் இன்று இந்தியா முழுமைக்கும் தெரியும். அந்தச் சொல்லை முதன்முதலில் நீர் வடிகட்டியில் கொண்டு வந்தது இவர்கள். 2010ல் கோல்ட் அவார்ட் கிடைத்தது. இது மிகச் சில மாடல்களில் மட்டுமே கிடைக்கிறது. விலை குறைந்த வகையில் கிடைப்பது இதன் சிறப்பு.
இவை தவிர, கைக்கு அடக்கமான அல்ட்ரா வயலெட் கதிர் குழாய் கிடைக்கிறது. அவசரத்துக்கும், பயணம் மற்றும் ஹோட்டல் போன்ற இடங்களிலும் உபயோகம் ஆகும்.
கையில் தூக்கிக்கொண்டு போகும் பாட்டில் வடிகட்டிகளும் கிடைக்கிறது. இதில் சில UV, UF வசதிகள் கொண்டவை.
பிலிப்ஸ், லுமினஸ், பெரிமொநிக்ஸ், உஷா, வெர்ல்பூல் போன்ற பல பிராண்டுகளிலும் வாட்டர் ஃபில்டர்கள் உள்ளன. உள்ளே உள்ள விஷயங்கள் மற்றும் பராமரிப்புகள் பற்றி கவனிக்க வேண்டும். முக்கியமாக கேட்ரிட்ஜ் விலை, எத்தனை காலம் தாக்குப் பிடிக்கும் போன்ற விஷயங்களை அறிந்து கொள்வது அவசியம்.
இந்த நீர் சுத்தி வடிகட்டிகளை வாங்குவதோடு நம் வேலை முடிவதில்லை. அதன் பிறகுதான் முக்கியமாக கவனிக்க வேண்டும். எல்லா நேரமும் புதிதாக வடிகட்டி சல்லடைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவ்வப்போது கழுவினால் போதுமானது. கார்பன் கேட்ரிட்ஜ்களை சொல்லப்பட்ட நேரத்துக்கு சரியாக மாற்ற வேண்டும். இல்லாவிடில் அதில் இருந்தே கிருமிகள் வெளிவரும் அபாயம் உண்டு.
சரியாக பராமரித்தால் மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைக்கும். அதனால் பராமரிப்புச் செலவுகளையும் விசாரித்துக் கொள்வது நல்லது. ‘பிரின்டர் விலை குறைவு... இங்க் விலை அதிகம்’ என்பது போல, இதிலும் பராமரிப்பு அதிகம் இல்லாமல் இருப்பதுதானே நல்லது?
RO சுத்திகரிப்பு முறை UV சுத்திகரிப்பு முறை UF சுத்திகரிப்பு முறை
கிருமிகள், வைரஸ்கள்
வெளியேற்றப்படுகின்றன. கிருமிகள், வைரஸ்கள்
கொல்லப்படுகின்றன. ஆனால், அவை வடிகட்டி வெளியேற்றப்
படுவதில்லை. கிருமிகள், வைரஸ்கள்
தடுக்கப்படுகின்றன.
மின்சாரம் தேவை. மின்சாரம் தேவை. மின்சாரம் தேவையில்லை.
நீர் அழுத்தத்துடன் பாய
மின்சாரம் தேவை. நீர் அதிக அழுத்தத்துடன் பாயத் தேவையில்லை. சாதாரண குழாய் நீர் அழுத்தம் போதும்.
கரைந்திருக்கும் உப்புத்தாதுவை நீக்கும். கரைந்திருக்கும் உப்புத்தாதுவை நீக்காது. கரைந்திருக்கும் உப்புத்தாதுவை நீக்காது.
Pre-filtration முதல் படிம வடிகட்டி சுத்திகரிப்பு அழுக்குகளை நீக்கும். வடிகட்டிய நீர் தேவை. அழுக்கு மற்றும் கலங்கிய
நீரையும் வடிகட்டும்.
தொடர்ந்த நீரோட்டம் தேவை. தொடர்ந்த நீரோட்டம் தேவை. ஆனால், கையில் எடுத்துப் போகும் கருவியும் உள்ளது. நீரை ஊற்றி வடிகட்டும் முறை. மிக எளிது. எங்கும் வைக்க முடியும்.
விலை மாடலுக்கு ஏற்றவாறு. இது சேர்ந்த வசதியுடன் வரும். தனிப்பட்டு என்றால் விலை அதிகமில்லை. வடிகட்டும் வசதியுள்ள இது குறைவான விலையில் கிடைக்கும்.

கருத்துரையிடுக