யோகா டிச்சரான பிபாசா பாசு

கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி முதல் பள்ளி சிறுவர்கள் வரை கலந்து கொண்டார்கள். பெங்களூருவில் நடந்த யோகா
நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை பிபாசா பாசு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கலந்து கொண்டார். பிபாசா பாசு யோகா கற்றவர், மற்றவர்களுக்கும் கற்று கொடுப்பவர் என்ற முறையில் அவர் அழைக்கப்பட்டிருப்பதாவே அனைவரும் கருதினர். ஆனால் அவர் கர்நாடக அரசிடம் ஒரு கோடியோ 50 லட்சம் பெற்றுக் கொண்டு தான் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதோடு பிபாசா பாசின் விமான செலவு, தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் செலவு அனைத்தையும் கர்நாடக மாநில அரசு செய்துள்ளது. ஒரு நடிகையை அழைத்து வர மக்கள் வரிப்பணத்தை செலவு செய்வதா என்று அந்த மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளன. அதோடு மக்கள் நலன் சார்ந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பணம் வாங்கிய பிபாசா பாசுவை நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget