ஆடி மாதம் என்றாலே ஆங்காங்கே பக்தி பாடல்களும் வீடுகளில் வேப்பிலையும் மஞ்சளுமாக காட்சியளிக்கும். இந்த நிலை மாறி ஆடி என்றாலே பொதுமக்களுக்கு தள்ளுபடி என்ற எண்ணம் தற்போது மேலோங்கி வருகிறது. இந்த
ஆடி தள்ளுபடியின் ரகசியம் தான் என்ன பார்ப்போம்!
ஆடி மாதத்தின் சிறப்பு
ஆடி மாதம் என்றால் ஆன்மிக மாதம் என்றே கூறலாம், அம்மனுக்கு உகந்த மாதமாக இந்த மாதம் கருதப்படுகிறது. பெரும்பாலான அம்மன் கோயில்களில் திருவிழாக்களும், கூழ்வார்த்தலும் இந்த மாதத்தில் தான் நடத்தப்படுகிறது. வெயிலின் தாக்கம் குறையவில்லை என்றாலும் ஆடிமாதங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். இதுமட்டுமின்றி ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு என்பது ஒரு சிறப்பு நிகழ்சியாகும். ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும். இந்த நாளில் பெண்கள் ஆற்றங்கரைகளில் நீராடி, சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். இவ்வாறு வழிபாடு நடத்தினால் ஆற்றில் நீரோட்டம் இருப்பது போல் தங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.
ஆடியின் முக்கியத்துவம்: ஆடியில் ஆற்றில் நீர்வரும் என்பதால் பழங்காலத்தில் ஆடி மாதம் என்பது விதை விதைப்பதற்கான மாதமாக இருந்து வந்தது. மேலும் ஆடி மாதத்தில் சூரியனின் சுழற்சிமுறையில் (பாவன இயக்கம்) மாற்றம் ஏற்படும் என்பதால் விதைப்பதற்கான காலமாக ஆடி மாதத்தை முன்னோர்கள் பின்பற்றினர். எனவே தான் ”ஆடிப்பட்டம் தேடி விதை\\” என்ற பழமொழி உருவானது. இதற்கேற்ப கிராமப்புறங்களில் ஆடி மாதங்களில் பயிர்களுக்கான விதைகள் விதைக்கப்படுவதால் விவசாயிகள் பரபரப்பாக காணப்படுவார்கள். இவ்வாறு ஆடி மாதத்துக்கு என்று பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுபவிசேஷங்களை பழங்காலத்தில் செய்வது கிடையாது. இதற்கு ஆயிரம் காரணங்களை நம் முன்னோர்கள் கூறிச்சென்றனர்.
ஆடிமாதத்தில் திருமணம் செய்ய கூடாது என்று சொல்வதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முன்பே சொன்னதுபோல ஆடி மாதம் விவசாயம் துவங்கும் காலம். அப்போது கல்யாணம், கச்சேரி என நேரத்தை செலவிட்டால் விவசாயம் பாதிக்கப்படும். விவசாயமே அப்போது பிரதான தொழிலாக இருந்ததால் அதற்கு முக்கியத்துவம் தரும் வகையில் அந்த மாதத்தில் சுப நிகழ்வுகள் நடத்தாமல் தள்ளி வைக்கப்பட்டது என்ற கருத்து நிலவுகிறது. இதுமட்டுமின்றி புதுமண தம்பதிகளை பிரித்து வைக்கும், பெண்ணை தாய் வீட்டுக்கு அனுப்புதலை கூறலாம். ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், சித்திரை வெயில் பச்சிளம் குழந்தைக்கு ஒத்துவராமல் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் என்றும் அதற்கான காரணம் முன்வைக்கப்படுகிறது. நமது முன்னோர்கள் சொல்லிச்சென்ற அனைத்து பழக்க வழக்கங்களையும் தற்போது நாம் கடைப்பிடிப்பது கிடையாது என்ற போதிலும் சில சம்பிரதாய சடங்குகளை இன்னும் நம்மில் பலர் கடைபிடித்து தான் வருகின்றனர். ஆடி மாதத்தில் புதுப்பெண்ணை தாய்வீட்டுக்கு அனுப்பிவைக்கும் நடைமுறை இன்றளவும் பின்பற்றப்பட்டுதான் வருகிறது.
விற்பனையை அதிகரிக்க
இவற்றை எல்லாம் புறந்தள்ளி ஆடி மாதம் என்றாலே சிறப்பு சலுகை, தள்ளுபடி போன்றவற்றை மக்கள் மனதில் பதிய வைத்து வருகிறார்கள் வியாபாரிகள். முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே புத்தாடைகள் வாங்கப்படும். அதுவும் தீபாவளிக்கு தான். இன்னும் சிலர் சற்று வசதி படைத்தவர்கள் பொங்கல் பண்டிகைக்கு புது ஆடைகளை வாங்குவார்கள். இதுதான் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறை. இதனையடுத்து திருமணம் போன்ற விசேஷங்களுக்கு குடும்ப உறுப்பினர்கள், உற்றார் உறவினர்களுக்கு புது துணி எடுத்து கொடுப்பதும் வழக்கமாக இருந்தது. இதனால் பண்டிகைகளை காலங்களில் மட்டுமே ஜவுளிக்கடைகளில் வியாபாரம் களைகட்டும். மற்றமாதங்களில் கடைகள் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி வியாபாரம் இன்றி காணப்படும். காலப்போக்கில் குடும்ப வருவாய்க்கு ஏற்றபடி பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றிக்கு சம்பந்தபட்டவர்கள் மட்டும் புத்தாடை வாங்கி அணிந்து கொண்டாடுவார்கள்.
தள்ளுபடி, இலவசம்: ஆடி மாதம் முழுவதும் தள்ளுபடி விலையில் விற்பனை. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அறிவிப்பு வேறு. சொல்லவா வேண்டும் நம் மக்களுக்கு. நாம் தான் இலவசம் என்றாலே எல்லாவற்றையும் மறந்து விடுமோ, படையெடுக்க ஆரம்பித்தனர் கடைகளுக்கு. டிவி இல்லாத வீடே இல்லை எனலாம். இவ்வாறு குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகி போன டிவியில், மணிக்கொரு தரம் “ஆடி தள்ளுபடி, ஆடி தள்ளுபடி” என்று மனதில் பதிய வைக்கும் விளம்பரங்கள். முக்கியமாக குழந்தைகளையும், பெண்களையும் குறி வைத்தே பெரும்பாலான விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி ஒவ்வொரு ரகத்திற்கும் வெவ்வேறு சதவீதத்தில் தள்ளுபடி வேறு அறிவிக்கப்படுகிறது. விளம்பரத்தை டிவியில் பார்த்துவிட்டு எந்த கடையில் எவ்வளவு தள்ளுபடி, எந்த கடையில் எந்த துணியை வாங்கலாம் என்பதையெல்லாம் கணித்து கடைகளை தேர்வு செய்ய கைகொடுக்கின்றன இந்த விளம்பரங்கள். துணிகளுக்கு மட்டுமே தள்ளுபடி என்றிருந்த நிலை மாறி தற்போது நகை கடைகளும் ஆடியில் தள்ளுபடியை அறிமுகப்படுத்தி வருகின்றன. இன்னும் ஒருபடி மேலே சென்று வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், வாசிஷ்மெஷின், ஏசி, டிவி, உள்ளிட்வற்றிற்கும் ஆடி மாதத்தில் குறிப்பிட்ட சில சலுகைகள் அறிவிக்கப்பட்டு வியாபாரிகள் கணிசமான லாபத்தை சம்பாதித்து வருகின்றனர்.
பக்கத்து வீட்டில் எடுத்துவிட்டார்களே, உறவினர் வீட்டில் ஆடி தள்ளுபடியில் ஆடைகள் வாங்கிவிட்டார்களே. நாம் என்று கடைக்கு செல்வது, எப்போது பர்சேசிங் செய்வது என்பது மட்டும் தான் பெரும்பாலான பெண்களின் மனதில், நினைவில் நிற்கின்ற ஒரே விஷயமாகும். ஆடியில் துணி வாங்கவில்லை என்றால் பணம் இல்லாதவர்கள் என்று கேலியாக பார்ப்பதால் இது கவுரவ குறைச்சலாக கூட கருப்படுகிறது. இதனால் ஆடித்தள்ளுபடியில் ஆடைகளை அள்ளாத ஆளே தற்போது இல்லை என்றே கூறலாம். ஆடி மாதம் என்பது பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இடையே உள்ள ஒரு வியாபார இடைவெளியை குறைப்பதற்கான ஒரு மாதமாக வியாபாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு நம்மில் பலரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம்.விலை குறைப்பு, சலுகைவிலை, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், தள்ளுபடி என்று எவ்வளவு தான் கூறினாலும் வியாபாரிகள் தங்களது விற்பனையை பெருக்கி லாபத்தை பார்ப்பதற்கான ஒரு வியாபாரயுக்தியே ஆடி தள்ளுபடியின் ரகசியம் என்பதை மறுப்பதற்கு இல்லை.

கருத்துரையிடுக