கிச்சனில் கலக்க வேண்டுமா

ரசம், சாம்பார், கீரை மசியலை இறக்கிய பின், பெருங்காயத்தூள் போட்டால் மணம் ஊரைத்தூக்கும். கொத்துமல்லி, புதினா துவையல்கள் அரைக்கும் போது, தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை தரும்.
கத்தரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவிப்பாருங்கள். கூட்டு,பொரியல் சுவையாக இருக்கும். மைக்ரோவேவ் ஓவனில் உட்புறப்பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரைமூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஓவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க“பளிச்’சென்று இருக்கும்.

பீட்ரூட் நறுக்கும் போது கைகளில் கறை ஒட்டுவதைத் தடுக்க, பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேகவைத்துக் கொள்ளுங்கள். பின்பு தோலை எடுத்து விட்டு துண்டுகளாக்கினால் கறை ஒட்டாமல் இருப்பதோடு, காய் நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக்கொண்டிருக்கிறதா? கவலை வேண்டாம். டைல்சை சாதாரணத் துணியாலோ அல்லது டிஷ்யூ பேப்பராலோ துடைத்து எடுங்கள்.

பின்னர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்துப்பாருங்களேன். “பளிச்’சென்று ஆகிவிடும்.கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் கடுகைப் போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவுங்கள். துர்நாற்றம் போய்விடும். கேரட் அல்வா செய்யும் போது கேரட்டைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த தண்ணீரில் சிறிது நேரம் வைத்துத் தோலைச் சீவினால் மிகச் சுலபமாகத் தோலை நீக்கி விடலாம். வடைக்கு அரைக்கும் போது மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் மாவு இறுகிவிடும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget