சியானுடன் நடிக்கும் மலர் டீச்சர்

'இருமுகன்' கமர்ஷியலாக வெற்றியடைந்ததும் உற்சாகமாக அமெரிக்கா கிளம்பிச் சென்றார் விக்ரம். அங்கிருந்தபடி தன்னுடைய அடுத்தப்படங்கள் குறித்த திட்டமிடலையும்
வகுத்திருக்கிறார் விக்ரம். இருமுகன் படத்தைத் தொடர்ந்து 'டோன்ட் ப்ரீத்' ஹாலிவுட் படத்தின் தமிழ் ரைட்ஸை வாங்கி அதன் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டியிருக்கிறார் விக்ரம். அதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் சிம்புவை வைத்து 'வாலு' படத்தை இயக்கிய விஜய சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

விக்ரம் கதாநாயகனாக நடிக்க புதிய படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் பற்றிய விவரம் எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், விக்ரமுக்கு ஜோடியாக 'பிரேமம்' மலர் டீச்சர் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். முக்கிய வேடத்தில் இயக்குனர் சமுத்திரக்கனியும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தின் கதைக்களம் வடசென்னையாம். எனவே, இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் வடசென்னையில் படமாக்கப்பட உள்ளது. டிசம்பர் இறுதியில் இந்தப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்குமாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget