பிரதமர் மோடியால் கடந்தமாதம் அறிவிக்கப்பட்ட செல்லாத நோட்டு அறிவிப்பால் கடந்த 40 நாட்களாக நாடெங்கும் மக்கள் பலவிதமான
சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.. ஒரு பக்கம் மக்கள் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மற்றும் வங்கியில் கால் கடுக்க நிற்கின்றனர். இன்னொரு பக்கம் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் யாரோ ஒருசிலரிடம் கற்றை கற்றையாக சிக்கி மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளால் ஆன உடையை நடிகை ஒருவர் அணிந்து வந்தால் அது எரிகிற நெரிப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஆகாதா..?
பாலிவுட் நடிகை க்ரீத்தி சனான் என்பவர் தான் அவர்.. சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுக்களால் வடிவமைக்கப்பட்ட உடையை அவர் அணிந்துள்ள புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியானது.. பணம் எடுக்க சிரமப்படும் சாமான்ய குடிமகன்கள் எல்லோரும் அவரை வறுத்தெடுத்து விட்டனர்.. ஆனால் உண்மையில் அவர் அந்த உடையை அணியவே இலையாம். அவர் அணிந்திருந்தது வெண்மை நிற உடை தானாம். யாரோ ஒருவர் தங்களது போட்டோஷாப் திறமையை பயன்படுத்தி அதை ரூபாய் நோட்டுக்களால் ஆன உடை போல மாற்றிவிட்டுள்ளார்களாம். க்ரீத்தி சனான் தான் அணிந்திருந்த உண்மையான உடையுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்ட பின் தான் நெட்டிசன்களின் சூடு கொஞ்சம் தணிந்துள்ளது.

கருத்துரையிடுக