டோலிவுட்டை பிரேமிக்கும் அனுமபா

பிரேமம் படத்தின் வாயிலாக மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அனுமபா பரமேஷ்வரன், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட
பிரேமம் படத்திலும் நடித்து தெலுங்கு ரசிகர்களையும் தன்னகப்படுத்தியுள்ளார். தனுஷிற்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்த அனுபமா, அடுத்து டோலிவுட்டின் முன்னணி நாயகனான ராம் சரணுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். துருவா படத்தின் வெற்றியைக் கொண்டாடி வரும் ராம் சரண் அப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிக்க அனுபமா பரமேஷ்வரனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. கிராமத்து பெண்ணாக அனுபமா இப்படத்தில் நடிக்கவுள்ளாராம். நடிகை ராக்ஷி கண்ணாவை இப்படத்தில் நாயகியாக்க திட்டமிட்ட படக்குழு தற்போது, அனுபமாவை நாயகியாக்கியுள்ளனர். பிரேமம் தவிர அ.ஆ எனும் தெலுங்கு படத்தில் நடித்துள்ள அனுபமா, சதமானம் பவதி எனும் தனது மற்றொரு தெலுங்கு பட ரிலீஸிற்காக காத்திருக்கின்றார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget