சின்னத்திரையில் பெப்ஸி உமாவிற்கு பிறகு பேசப்பட்ட சில தொகுப்பாளினிகளில் விஜய் டிவி ரம்யாவும் ஒருவர். சேனல்கள் மட்டுமின்றி, சினிமா விழாக்களிலும் தொகுத்து வழங்கி வந்த
இவர், மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் போன்ற படங்களிலும் நடித்தார். குறிப்பாக, மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்த பிறகு சினிமாவில் ரம்யா பிஸியாகி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
அதோடு, அவரும் சினிமாவில் அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்று தீவிர முயற்சி எடுத்து வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி சினிமாவில் மெகா கேரக்டர்கள் எதுவும் கிடைத்தபாடில்லையாம். அதனால், சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று சொல்லி, சின்னத்திரையில் தனக்கான இடத்தை இழந்து விடக்கூடாது என்று தற்போது சினிமாவை ஓரங்கட்டி விட்டு, சின்னத்திரையில் முழுவீச்சில் இறங்கி விட்டார் ரம்யா. இனிமேல் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து கொண்டே, சீரியல்களில் வெயிட்டான வேடங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் அவர்.

கருத்துரையிடுக