2016-ம் ஆண்டில் ஹிட் அடித்த டாப் 10 பாடல்கள்

தமிழ்ப் படங்களின் டிரைலர்களை ஒரு காலத்தில் பார்க்க வேண்டும் என்றால் தியேட்டர்களுக்கு சென்றுதான் பார்க்க வேண்டும். தொலைக்காட்சிகள்
வந்த பிறகு அவற்றில் டிரைலர்கள் வர ஆரம்பித்தன. ஆனாலும், அந்த டிரைலர்கள் எப்போது ஒளிபரப்பாகும் என்பது சரியாகத் தெரியாது. அப்படியே வந்தாலும் நமக்கிருக்கும் வேலைகளில் அவற்றைச் சரியாகப் பார்க்க முடியாது.

யு டியூப் வந்த பிறகு யாருக்கு பொற்காலமோ இல்லையோ சினிமாக்காரர்களுக்குத்தான் பொற்காலமாக அமைந்தது. படத்தின் முதல் பார்வையிலிருந்து படத்தின் காட்சிகள் வரை யு டியூபில் வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். யு டியூப் என்ற வீடியோ இணையதளத்தில் சமயங்களில் ஸ்டில்களை மட்டுமே வைத்து பாடல்களை வெளியிடும் 'லிரிக் வீடியோ'யாக்கள் என்ற ஒன்று வரவும் காரணமாக அமைந்தது.

அந்த அளவிற்கு சினிமாவும், யு டியூபும் இரண்டறக் கலந்துவிட்டன. அதனால், இந்த 2016ம் ஆண்டின் சிறந்த 10 பாடல்களை யு டியூப் பார்வைகளை வைத்தே கணக்கிடலாம் என்ற தேடலில் இறங்கினோம். அந்தத் தேடலில் கிடைத்த பார்வைகளின் அடிப்படையில் சூப்பர் ஹிட்டாக விளங்கும் 10 பாடல்களை வரிசைப்படுத்தியுள்ளோம்.

1. கபாலி - ‛‛நெருப்புடா...''

இசை - சந்தோஷ் நாராயணன்

பாடல் - அருண்ராஜா காமராஜ்

பாடியவர் - அருண்ராஜா காமராஜ்

யு டியூப் பார்வைகள் - 2 கோடியே 58 லட்சம் + 23 லட்சம்

பாடல் வீடியோ : https://youtu.be/bwXHx8ng7_E

லிரிக் வீடியோ : https://youtu.be/LHaGDT6Pdbk

'கபாலி' படத்தின் டீசர் வெளியானதிலிருந்தே 'நெருப்புடா...' பாடலின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகியது. ரஜினிகாந்த்தை வைத்து இதுவரை எவ்வளவோ பேர் எவ்வளவோ பாடல்களை எழுதியிருந்தாலும், அவருடைய வேகத்திற்கம், ஸ்டைலுக்கும் மிகவும் பொருத்தமான ஒரு வார்த்தையை அருண்ராஜா காமராஜ் எழுதி ரஜினியின் புகழ் என்ற நெருப்பை மேலும் பற்ற வைத்துவிட்டார் இந்தப் பாடலின் மூலம். இந்த வருடத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படப் பாடல்களில் யு டியூபில் நம்பர் 1 இடத்தை இந்தப் பாடல் பிடித்ததிலிருந்தே இந்தப் பாடல் எவ்வளவு ஹிட் ஆகியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

2. அச்சம் என்பது மடமையடா : ‛‛தள்ளிப் போகாதே...''

இசை - ஏ.ஆர்.ரகுமான்

பாடல் - தாமரை

பாடியவர்கள் - சித் ஸ்ரீராம், அபர்ணா நாராயணன், ஏடிகே

யு டியூப் பார்வைகள் - 2 கோடியே 55 லட்சம் + 42 லட்சம்

பாடல் வீடியோ : https://youtu.be/PiL5UTTTrxk

லிரிக் வீடியோ : https://youtu.be/IarsrX60bZw

கௌதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான், தாமரை, சிம்பு கூட்டணி என்றதுமே இந்தப் படத்தின் பாடல்கள் மீது மிகப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதைச் சிறிதும் ஏமாற்றாமல் இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களை மகிழ்வித்தது. இந்தப் பாடல் வெளியான நாளிலிருந்தே இளம் இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்த பாடலாக அமைந்தது. ரகுமானின் இசையும், தாமரையின் காதல் வரிகளும் இன்னமும் ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டணியின் எவர்க்ரீன் பாடலாக இந்தப் பாடல் அமைவது நிச்சயம்.

3. ரஜினி முருகன் : ‛‛உன் மேல ஒரு கண்ணு...''

இசை - டி. இமான்

பாடல் - யுகபாரதி

பாடியவர்கள் - ஜித்தின் ராஜ், மகாலட்சுமி ஐயர்

யு டியூப் பார்வைகள் - 2 கோடியே 48 லட்சம் + 41 லட்சம்

பாடல் வீடியோ : https://youtu.be/nngwP1WWva4

லிரிக் வீடியோ : https://youtu.be/slMqJRSfPfc

இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் இனிமையான மெலடிப் பாடல்களைக் கொடுப்பவர் என்ற பெருமையை டி.இமான் பெற்றுவிட்டார். இவர் இசையமைக்கும் பாடல்களில் ஒரு மெலடி பாடல் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். மற்ற பாடல்களை விட இந்த மெலடிப் பாடல்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்துவிடும். அந்த வரிசையில் 'உன் மேல ஒரு கண்ணு' பாடலும் இனிமையான மெலடி பாடலாக அமைந்தது. யுகபாரதியின் காதல் வரிகளில் வெளிவந்த இந்த ஒரு இனிமையான பாடல் போதும் இந்தப் படத்தைப் பற்றி அதிகம் பேச வைக்க...அது இந்தப் பாடல் மூலம் இந்தப் படத்திற்கும் கிடைத்தது.

4. சேதுபதி : ‛‛கொஞ்சிப் பேசிட வேணாம்...''

இசை - நிவாஸ் கே. பிரசன்னா

பாடல் - நா. முத்துக்குமார்

பாடியவர்கள் - ஸ்ரீராம் பார்த்தசாரதி, கே.எஸ். சித்ரா

யு டியூப் பார்வைகள் - 1 கோடியே 40 லட்சம் + 7 லட்சம்

பாடல் வீடியோ : https://youtu.be/foi_2Id7uaw

லிரிக் வீடியோ : https://youtu.be/fzyWgNrXlqo

எளிமையான வார்த்தைகள், அழகான கவிதை நயம் என தமிழ் ரசிகர்களை தன்னகத்தே கொண்டு விளங்கிய நா.முத்துக்குமார் மறைவு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகினருக்கும் மிகப் பெரும் இழப்புதான். முத்துக்குமாரின் இனிமையான டூயட் பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்றாக அமைந்தது. யு டியூபில் இந்தப் பாடலை இவ்வளவு பேர் ரசித்திருக்கிறார்கள் என்பது மிகப் பெரும் ஆச்சரியமாக இருந்தது. விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் இருவரது இயல்பான நடிப்பும் இந்தப் பாடலின் தனி சிறப்பம்சம்.

5. ஒரு நாள் கூத்து : ‛‛அடியே அழகே...''

இசை - ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் - விவேக்

பாடியவர்கள் - ஷான் ரோல்டன், பத்மலதா

யு டியூப் பார்வைகள் - 1 கோடி + 64 லட்சம்

பாடல் வீடியோ : https://youtu.be/SDAMyv1hbCo

லிரிக் வீடியோ : https://youtu.be/QyMeARXNz7c

'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான போதே பலரது கவனத்தையும் ஈர்த்தவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். இன்னும் மிகச் சரியான திருப்புமுனை கிடைக்காமல் இருக்கிறார். இவரது இசையில் வெளிவந்த 'அடியே அழகே..' பாடல், காதலில் விழுந்த பல இளைஞர்களுக்கு ஒரு காதல் கீதமாகவே இருந்தது. வளரும் பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் 'ஜோக்கர்' பட இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பத்மலதா இருவரது வசீகரக் குரலும் இந்தப் பாடலை மேலும் அழகாக்கியது.

6. ரெமோ : ‛‛செஞ்சிட்டாளே...''

இசை - அனிருத்

பாடல் - விக்னேஷ் சிவன்

பாடியவர் - அனிருத்

யு டியூப் பார்வைகள் - 70 லட்சம் + 78 லட்சம்

பாடல் வீடியோ : https://youtu.be/EThWWliR63w

லிரிக் வீடியோ : https://youtu.be/Y1tKehkqoi0

தனுஷ் - அனிருத் இணைந்தாலே ஹிட் கூட்டணி என்பது மாறி சிவகார்த்திகேயன் - அனிருத் இணைந்தாலும் ஹிட் தான் என்றாகி வருகிறது. இந்தப் படத்தில் மற்ற பாடல்களைக் காட்டிலும் இந்தப் பாடல் அதிக ஹிட்டாகியது. 'நானும் ரௌடிதான்' இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய இந்தப் பாடல், அனிருத்தின் குரலில் காதலை தனியாக வடித்துக் காட்டியது. ஆங்கிலக் கலப்பு பாடலில் அதிகமிருந்தாலும் அதையும் மீறி ரசிக்க வைத்த பாடல்.

7. தெறி : ‛‛உன்னாலே என் ஜீவன்...''

இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்

பாடல் - நா. முத்துக்குமார்

பாடியவர்கள் - ஹரிஹரசன், சைந்தவி, வைக்கம் விஜயலட்சுமி

யு டியூப் பார்வைகள் - 75 லட்சம் + 64 லட்சம்

பாடல் வீடியோ : https://youtu.be/LoPf32nKYb8

லிரிக் வீடியோ : https://youtu.be/H3GhtM8V-dU

விஜய் படம் என்றாலே பாடல்கள் தெறிக்க விடும் என்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வரும் விஷயம். இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாமே ஹிட் பாடல்களாக அமைந்தன. அதிலும் 'ஜித்து ஜில்லாடி...' பாடல் வெளியான உடனேயே ஒரு மில்லியன் பார்வைகளை யு டியூபில் வேகமாகக் கடந்தது. ஆனால், மற்ற பாடல்களையும் மீறி நா.முத்துக்குமார் எழுதிய இந்த டூயட் மெலடி பாடல் மற்ற 'தெறி' பாடல்களை பின்னுக்குத் தள்ளி அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது. ஹரிஹரன், சைந்தவி குரலில் காதல் இழையோடியது.

8. இருமுகன் : ‛‛ஹலனா..ஹலனா..''

இசை - ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் - மதன் கார்க்கி

பாடியவர்கள் - கிறிஸ்டோபர் ஸ்டான்லி, அபய் ஜோத்புர்கர், உஜ்ஜயினி ராய்

யு டியூப் பார்வைகள் - 75 லட்சம் + 30 லட்சம்

பாடல் வீடியோ : https://youtu.be/GWH_k6S7YQU

லிரிக் வீடியோ : https://youtu.be/TIOhJXUW2Cc

ஹாரிஸ் ஜெயராஜ் என்றாலே ஏதாவது வித்தியாசமான வார்த்தைகள் பாடல்களில் இடம் பிடித்தால் அந்தப் பாடல் ஹிட்டாகிவிடும். அந்த விதத்தில் இந்தப் பாடலில் இடம் பெற்ற 'ஹலனா..ஹலனா..' என்ற வார்த்தைகள் கொஞ்சலுடன் அமைந்து ஹிட்டாகியது. விக்ரம், நயன்தாராவின் முதன் முறை ஜோடி கெமிஸ்ட்ரியும், இனிமையான லொகேஷனும் இந்தப் பாடலை மேலும் ரசிக்க வைத்தன. மதன் கார்க்கியின் வரிகளும் ஹாரிஸின் வரிகளும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு ஈர்த்தன.

9. அரண்மனை 2 : ‛‛குச்சி மிட்டாய்..''

இசை - ஹிப்ஹாப் தமிழா

பாடல் - ஹிப்ஹாப் தமிழா

பாடிவர் - அந்தோணி தாசன்

யு டியூப் பார்வைகள் - 89 லட்சம் + 3 லட்சம்

பாடல் வீடியோ: https://youtu.be/2gTEZLdIWAg

லிரிக் வீடியோ : https://youtu.be/00DzRMfLUtM

'ஹிப்ஹாப்' தமிழா இசையமைப்பில் வரும் பாடல்கள் வழக்கமான சினிமா பாடல்களாக இருக்காது. ஒவ்வொரு பாடலும் ராப்பும், வெஸ்டர்னும், ஃபோக்கும் கலந்த கலவைகளாகவும் இருக்கும். இந்தப் பாடலை எந்த இசை ரகத்தில் சேர்ப்பது என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் நம்மை போக வைக்காமல் ரசிக்க வைத்த பாடல் இது. பல நட்சத்திரங்கள், நிறைய நடன நடிகர்கள் என பாடலுக்குள் ஒரு கதையையும் வைத்து அடடா என சொல்ல வைத்த பாடல்.

10. ஜில் ஜங் ஜக் : ‛‛ஷுட் த குருவி...''

இசை - விஷால் சந்திரசேகர்

பாடல் - விவேக்

பாடியவர் - அனிருத்

யு டியூப் பார்வைகள் - 82 லட்சம்

பாடல் வீடியோ : https://youtu.be/0Up0YG0h5Ao

இந்தப் பாடல்களையெல்லாம் சிறந்த பாடல் வரிசையில் சேர்க்கவில்லை என்றால் இன்றைய தலைமுறையினர் நம்மை 'ஷுட்' செய்தாலும் செய்துவிடுவார்கள். ஆபாசமா, மோசமா என்றெல்லாம் சர்ச்சையைக் கிளப்பிய பாடல், யு டியுபில் இந்த அளவிற்கு பார்வைகளைப் பெற்றிருக்கிறது என்றால் யாரும் சென்று பார்க்காமலா வந்திருக்கும். சல்மான் கான் அறிமுகப்படுத்தி வைத்த பாடல் என்றால் சும்மாவா ?.

'கபாலி, அச்சம் என்பது மடமையடா, தெறி' போன்ற படங்களில் அனைத்துப் பாடல்களுமே யு டியூபில் குறிப்பிடத்தக்க பார்வைகளைப் பெற்ற பாடல்களாக இருந்தன. மற்ற இசையமைப்பாளர்கள், மற்ற படங்களுக்கும் இந்தப் பட்டியலில் இடம் இருந்தால் வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஒரு படத்திலிருந்து ஒரு பாடல் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget