வீரசேகரன் படத்தில் தமிழுக்கு வந்த அமலாபால், அதன்பிறகு சாமி இயக்கத்தில் நடித்த சிந்துசமவெளி படத்தில் சொந்த மாமனாருடன் தவறான உறவு
வைத்துக்கொள்ளும் வேடத்தில் நடித்து சர்ச்சையை சந்தித்தார். ஆனால் அதையடுத்து சுதாரித்துக்கொண்ட அவர், தனது இமேஜை கெடுக்காத கதைகளாக தேடிப்பிடித்து நடித்தார். அதோடு, விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். பின்னர் டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் ஒரே வருடத்தில் குடும்ப வாழ்க்கைக்கு டாடா காட்டி விட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்து விட்டார்.
மேலும், திருமணமான நடிகைகளுக்கு அக்கா, அண்ணி, அம்மா வேடங்கள் கிடைப்பதே அரிதாக இருக்கும் சூழ்நிலையில், அமலாபாலோ மறுபடியும் கதாநாயகி வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு, திருமணத்திற்கு முன்புகூட படப்பிடிப்பு தளங்களில் அமைதி காத்து வந்த அவர், தற்போது படப்பிடிப்பு தளங்களில் செம ஜாலியாக காணப்படுகிறார். யாரையாவது கிண்டல் செய்வது, கலாய்ப்பது என்று கலகலப்பாக இருக்கிறார். அதோடு எனது திருமண வாழ்க்கை இத்தனை சீக்கிரத்தில் முடிந்து விடும் என்று நான் நினைத்தே பார்த்ததில்லை. ஆனாலும் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்கிறேன் என்று அதை டேக் இட் ஈஸி பாலிஸியாக எடுத்துக்கொள்கிறார் அமலாபால்.

கருத்துரையிடுக