சாவித்ரி காதாபாத்திரத்தில் வித்யாபாலன்

மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதை, தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் படமாக உருவாக உள்ளது. திரையுலகில் சாவித்ரி
முத்திரை பதித்தது தொடங்கி அவரது இறுதி காலத்தில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் சாவித்ரி வேடத்தில் சமந்தா நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இப்போது மகாநதி தெலுங்கு படத்தில் சாவித்ரி வேடத்தில் சமந்தா நடிக்கவில்லை என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தில் சமந்தாவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் சாவித்ரி வேடத்தில் நடிப்பது யார்? என்று விசாரித்தபோது, இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகை அந்த வேடத்தில் நடித்தால் தான் படத்தை இந்திய அளவில் வெளியிட முடியும் என்பதால், இந்தி நடிகை வித்யாபாலனிடம் அந்த வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இதற்கு முன்பு, கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதா வாழ்க்கை வரலாறு கதையில் உருவான ‛தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் வித்யாபாலன் தான் சில்க்காக நடித்திருந்தார். அந்த வேடத்தில் நடித்தமைக்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதனால், இந்த படத்தில் சாவித்ரியாக அவர் நடித்தால் படத்திற்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget