சென்னை டெஸ்டில் பட்டையை கிளப்பிய இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 7 விக்கெட்
வீழ்த்திய ஜடேஜா ‘சுழலில்’ இங்கிலாந்து ‘சரண்டர்’ ஆனது. தொடரை 4–0 என வென்ற இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 3–0 என தொடரை கைப்பற்றி இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 477, இந்தியா 759 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்திருந்தது.
சிறப்பான துவக்கம்: நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. கேப்டன் குக், ஜென்னிங்ஸ் ஜோடி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் 103 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம் அப்படியே மாறியது. ரவிந்திர ஜடேஜா அதிசயம் நிகழ்த்தினார். இவரது ‘சுழலில்’ முதலில் குக் (49) சிக்கினார். மீண்டும் வந்த ஜடேஜா, அரை சதம் கடந்த ஜென்னிங்சை (54) வெளியேற்றினார். ஜடேஜா பந்தில், ஜோ ரூட்டிற்கு எல்.பி.டபிள்யு., முறையில் ‘அவுட்’ தர அம்பயர் மறுத்தார். பின் டி.ஆர்.எஸ்., முறையில் ‘அவுட்’ உறுதியாக ரூட் (6) ஏமாற்றத்துடன் திரும்பினார். இஷாந்த் பந்தில் ஜடேஜாவின் அபார ‘கேட்ச்சில்’ பேர்ஸ்டோவ் (1) கிளம்பினார்.
ஜடேஜா ‘5’: பின் இணைந்த மொயீன் அலி, ஸ்டோக்ஸ் ஜோடி ‘டிரா’ செய்யும் முனைப்பில் விளையாடியது. இந்த நேரத்தில் ‘கைராசிக்காரர்’ ஜடேஜா வந்தார். ஆடுகளம் ‘பேட்டிங்கிற்கு’ சாதகமாக இருந்தாலும், தனது திறமையால் எதிரணியை அச்சுறுத்திய ஜடேஜா, மொயீன் அலியை (44) அவுட்டாக்கினார். ஸ்டோக்சையும் (23) வெளியேற்றிய இவர் 5வது விக்கெட்டை கைப்பற்றினார். டாசன் (0), ரஷித் (2) ஒற்றை இலக்கில் அவுட்டாகினர். மீண்டும் வந்த ஜடேஜா, பிராட் (1), ஜாக் பால் (0) விக்கெட்டை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. பட்லர் (6) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 7 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை கருண் நாயர் வென்றார். தொடர் நாயகன் விருதை கோஹ்லி தட்டிச் சென்றார்.
தொடர் நாயகன் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் கோஹ்லி (655) முதலிடம் பிடித்தார். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (491) உள்ளார்.
இதன் ‘டாப்–3’ பட்டியல்:
வீரர்/அணி போட்டி ரன் சதம்/அரைசதம்
கோஹ்லி/இந்தியா 5 655 2/2
ஜோ ரூட்/இங்கிலாந்து 5 491 1/4
புஜாரா/இந்தியா 5 401 2/1
சபாஷ் அஷ்வின்
இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் சாய்த்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் அஷ்வின் ‘நம்பர்–1’ ஆனார். இவர் 5 டெஸ்டில் 28 விக்கெட் வீழ்த்தினார்.
இதன் ‘டாப்–3’ பவுலர்கள் விவரம்:
வீரர்/அணி போட்டி விக்.,
அஷ்வின்/இந்தியா 5 28
ஜடேஜா/இந்தியா 5 26
ரஷித்/இங்கிலாந்து 5 23
6
இங்கிலாந்து அணி கேப்டன் குக், இத்தொடரில் 6வது முறையாக ஜடேஜா ‘சுழலில்’ சிக்கினார்.
9
இந்திய டெஸ்ட் அணிக்கு, ஒரே ஆண்டில் அதிக வெற்றி இம்முறைதான் கிடைத்துள்ளது. இதுவரை 12 போட்டியில் விளையாடி 9 வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன், அதிகபட்சமாக கடந்த 2010ல் 14ல் பங்கேற்று 8 வெற்றி கிடைத்திருந்தது.
* ஒட்டுமொத்தமாக ஒரே ஆண்டில் அதிக வெற்றி (9) பெற்ற 3வது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. முதலிரண்டு இடங்களை இங்கிலாந்து (11), ஆஸ்திரேலியா (10) வகிக்கின்றன.
வீணான வாய்ப்பு
அஷ்வின் வீசிய 8வது ஓவரின் 5வது பந்தை கேப்டன் குக் எதிர் கொண்டார். இவரது ‘பேட்டில்’ உரசி சென்ற பந்து ‘விக்கெட் கீப்பர்’ பார்த்திவ் கைக்கு சென்றது. பார்த்திவ் ‘கேட்ச்’ வாய்ப்பை கோட்டைவிட்டார். இதனால், 4 ரன்களில் கண்டம் தப்பினார்.
* மிஸ்ராவின் 28வது ஓவரின் 4வது பந்தை ஜென்னிங்ஸ் சந்தித்தார். இவர் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை ‘ஷார்ட் லெக்’ திசையில் இருந்த லோகேஷ் ராகுல் தவறிவிட்டார். 31 ரன்கள் எடுத்திருந்த ஜென்னிங்ஸ், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரை சதம் கடந்தார்.
2
ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமை பெற்றார் ஜோ ரூட். இவர் இந்த ஆண்டு 17 போட்டியில் விளையாடி 1477 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தை முன்னாள் வீரர் மைக்கேல் வான் (14 போட்டி, 1481 ரன்) வகிக்கிறார்.
15 ரன், 6 விக்.,
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. ஆனால், அடுத்த 15 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தோல்வியை சந்தித்தது.
பதிலடி
கடந்த 2012ல் இந்திய மண்ணில் நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2–1 என கைப்பற்றியது. இதற்கு, இம்முறை 4–0 என தொடரை வென்ற இந்திய அணி தக்க பதிலடி தந்தது.
.
22
இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு அதிக தோல்வி பெற்றுத்தந்த கேப்டன் ஆனார் அலெஸ்டர் குக் (59ல் 22 தோல்வி). அடுத்த இடங்களில் ஆர்தர்டான் (54ல் 21), டேவிட் கோவர் (32ல் 18), நாசர் ஹுசைன் (45ல் 15) உள்ளனர்.
25
சென்னை டெஸ்டில் அசத்திய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக தனது 25வது வெற்றியை (117 டெஸ்ட், 43 தோல்வி, 49 ‘டிரா’) பதிவு செய்தது. தவிர, சொந்தமண்ணில் இந்தியாவுக்கு கிடைத்த 94வது வெற்றி இது. ஒட்டுமொத்த அளவில், இந்தியா பெற்ற 136வது வெற்றியாக அமைந்தது.
477
முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்தும் தோற்ற அணிகள் வரிசையில் இங்கிலாந்து (477), முதலிடம் பிடித்தது. அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் (463, கோல்கட்டா, 2011) உள்ளது.
* இதேபோல, இந்திய மண்ணில் முதல் இன்னிங்சில் 400 ரன்னுக்கும் மேல் எடுத்தும் இரு முறை தோற்ற முதல் அன்னிய அணி இங்கிலாந்து தான்.
முதல் அணி
முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு அதிகமாக (477) குவித்து, இன்னிங்ஸ் மற்றும் அதிக ரன்கள் (75) வித்தியாசத்தில் வீழ்ந்த அணி என்ற மோசமான சாதனை படைத்தது இங்கிலாந்து.
இதற்கு முன், இதே இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 432 ரன் குவித்து (எதிர்– ஆஸி., 2001, லண்டன்) இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்து இருந்தது. மொத்தம் 6 முறை அரங்கேறிய இந்த சோக சாதனையை, 4 முறை இங்கிலாந்து அணி தான் செய்தது.

கருத்துரையிடுக