சின்னத்திரை நாயகி நந்தினி

சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கேரக்டரில் பின்னி எடுத்தவர் நந்தினி. மதுரை வட்டாரமொழி பேசி கலக்கி எல்லோரையும் கவர்ந்தார். இவரது
நிஜயப்பெயரே மறந்து எல்லோரும் மைனா என்ற அழைக்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு அந்த கேரக்டர் ரீச் ஆனது.

தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் டார்லிங் டார்லிங் என்ற புதிய தொடரில் ருக்கு என்ற கேரக்டரில் நடிக்கிறார். இதிலும் அதே மாதிரியான சுட்டித்தனமான கேரக்டர். கோவை பகுதி கொங்கு தமிழ் பேசி நடிக்கிறார். இவரது மதுரை வட்டார மொழிக்கு ரசிகர்கள் பெருகியதை போன்ற கொங்கு தமிழுக்கும் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.

"மைனா கேரக்டருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை உயரத்தில் வைத்தது. அதே ஆதரவை ருக்கு கேரக்டருக்கும் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. சென்னை பாஷை பேசி நடிக்கவும் ஆர்வம் இருக்கிறது. அனேகமாக அது அடுத்த தொடரில் நடக்கும் என்று நினைக்கிறேன். சின்னத்திரை மூலம் ரசிகர்கள் என்னை அவர்களது குடும்பத்தில் உள்ள ஒரு துறுதுறு பெண்ணாக பார்ப்பது மகிழ்ச்சியாக" இருக்கிறது என்கிறார் நந்தினி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget