கோலிவுட் கோதாவில் மிஸ் கேரளா நடிகை

மலையாளத்தில் 3 படங்களில் நடித்து விட்டு ஐயா படத்தில் தமிழுக்கு வந்தவர் நயன்தாரா. அதேபோல் மலையாளத்தில் நீலத்தாமரா -என்ற படத்தில்
நடித்து விட்டு வீரசேகரன் படத்தில் தமிழுக்கு வந்தவர் அமலாபால். அவரைத் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்து விட்டு சுந்தரபாண்டியன் படத்தில் தமிழுக்கு வந்தார் லட்சுமிமேனன். ஒரு வடக்கன் செல்பி படத்தில் நாயகியாக நடித்து விட்டு அச்சம் என்பது மடமையடா படத்திற்காக தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன்.

இவர்கள் வரிசையில், மலையாளத்தில் 2 படங்களில் நடித்து விட்டு 4 ஜி படத்தில் தமிழுக்கு இறக்குமதியாகியிருப்பவர் காயத்ரி சுரேஷ். இந்த படத்தில் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், சில மலையாள நடிகைகளைப்போன்று பத்து கண்டிசன்களை போட்டு நடிக்கும் நடிகை இல்லையாம். எந்த மாதிரியான கதைகள் என்றாலும் அதற்கேற்ப நடிக்க தயாராக இருக்கிறேன் என்று வந்த வேகத்திலேயே ஸ்டேட்மென்ட் கொடுத்து கோலிவுட் டைரக்டர்களின் கவனத்தை இழுத்துள்ளார்.

மேலும், கேரளாவிலுள்ள திருச்சூரைச்சேர்ந்தவரான காயத்ரி சுரேஷ், 2014ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற மிஸ் கேரளா போட்டியில் கலந்து கொண்டு டைட்டீல் வின்னராக வெற்றி பெற்றுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget