குத்துச்சண்டை வீரரான ரித்திகா சிங், இறுதிச்சுற்று படத்தில் நடித்து தேசிய விருது வாங்கினார். அதையடுத்து தமிழில் ஆண்டவன் கட்டளை,
சிவலிங்கா என்ற இரண்டு படங்கள் அடுத்தடுத்து ஒப்பந்தமானதால், தமிழ் சினிமா மீது பெரிய நம்பிக்கையுடன் நடித்து வந்தார். விஜயசேதுபதியுடன் நடித்த ஆண்டவன் கட்டளை பெரிதாக கைகொடுக்காதபோதும், தற்போது பி.வாசு இயக்கத்தில் நடித்துள்ள சிவலிங்கா படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித் துள்ளார்.
இதற்கிடையே, இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் வெங்கடேசுடன் நடித்துள்ளார் ரித்திகா சிங். குரு என்ற பெயரில் தயாராகியுள்ள அந்த படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. மேலும், இந்த படத்தில் அவர் நடித்து வந்தபோதே சில டைரக்டர்கள் அவரிடம் கதை சொல்லி வந்தார்களாம். அப்படி கேட்டதில் ஒரு ஆக்சன் கதையை ஓகே பண்ணியுள்ள ரித்திகா சிங், அந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதையில் நடிக்கிறாராம். தற்போது தெலுங்கில் நடித்துள்ள குரு படம் வெளியானதும் அந்த படம் குறித்த தகவல் வெளியிடப்பட உள்ளதாம்.

கருத்துரையிடுக