வீர சிவாஜி சினிமா விமர்சனம்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரித்து வழங்க, ஸ்ரீதேணான்டாள் பிலிம்ஸ் வெளியிட, விக்ரம் பிரபு - ஷாம்லி ஜோடி நடிக்க,
டி.இமான் இசையில், மைனா எம்.சுகுமார் ஒளிப்பதிவில் கணேஷ் விநாயக் எழுத்து, இயக்கத்தில் வந்திருக்கும் படம் தான் "வீர சிவாஜி".

கதைப்படி, பைனான்ஸ் கம்பெனி நடத்தியும், ஒன்றுக்கு பத்தாய் பணம் தருகிறோம் என்றும், பழையதங்கத்திற்கு பல மடங்கு புதிய தங்கம் தருகிறோம்... என்றும் ஊருக்கு ஒரு பிராடுத்தனம் பண்ணி பெரும் பணக்காரனாகி அதன் மூலம் அரசியலிலும் அடியெடுத்து வைக்கத் துடிக்கும் ஜான் விஜய்யிடமும், மொட்ட ராஜேந்திரனிடமும் அக்கா பெண்ணின் ஆபரேஷனுக்கு வைத்திருந்த ஐந்து லட்சத்தை நண்பர்கள் ரோபோ சங்கர், பண்ணி மூஞ்சி வாயன் இவரது பேச்சை கேட்டு அவர்களது ஐந்து லட்சத்தோடு பத்து லட்சமாக பறிகொடுக்கும் கால் டாக்ஸி டிரைவர் சிவாஜி எனும் விக்ரம் பிரபு, வில்லன் ஜான் விஜய் அண்ட் கோவினரை தன் அதிபுத்திசாலித்தனததால் தேடிக் கண்டுபிடித்து, அடி உதைபட்டு கார் சேஸிங் உள்ளிட்ட வீர தீரமெல்லாம் செய்து ஓட்டு மொத்த பொதுமக்களின் பணத்தையும் கைப்பற்றி, அவர்களிடமே திருப்பிக் கொடுத்து, தன் அக்கா மகளின் ஆபரேஷனையும் சக்ஸஸ்புல்லாய் நடத்தி முடித்து, விக்ரம் பிரபுவை தவறாய்புரிந்து கொண்டிருக்கும் போலீஸ் இன்ஸ் மாரிமுத்துவின் மகளும், நாயகியுமான ஷாம்லியுடனான தன் காதலிலும் ஜெயிக்கும் கதை தான் "வீர சிவாஜி " படத்தின் மொத்தக் கதையும். இதைதலையைச் சுத்தி மூக்கைத் தொடும் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறது "வீர சிவாஜி" டீம்.

சிவாஜியாக வீரம் காட்ட முற்பட்டிருக்கிறார் விக்ரம் பிரபு. அவரைக் காட்டிலும் அவரது புடைத்துக் கொண்டிருக்கும் மூக்கு அதிகம் அதை காட்டியிருக்கிறது.

ஹாலிவுட் நடிகை லுக்கில் இருக்கும் ஷாம்லி பாண்டிச்சேரி பெண்ணாக ஓ.கே.மாரிமுத்துவின் மகளாகவும், விக்ரம் பிரபுவின் காதலியாகவும் ஒட்டவில்லை .

நாயகரின் காமெடி நண்பர்களாய் கடிக்கும் ரோபோ சங்கர், யோகி பாபு இருவரில் பின்னவர் ஆறுதல். அதிலும், "மேல் இடம்னா.... எந்த இடம் ?" எனக் கேட்பவரிடம்...", "4 வது மாடியில குடித்தனம் இருக்கோம் அதைத்தான் அவர் அப்படி சொல்றார்..." எனக் கலாய் பதில் யோகி பாபு மிரட்டல்.

இவர்களைத் தாண்டி காமெடி, மோசடிப் பேர்வழிகள் ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன் இருவரும். "நம்மளை நம்புறவங்களை ஏமாத்திட்டு இந்த சரக்கையும் சைடீஸையும் சாப்பிடுறது ரொம்ப வருத்தமா இருக்குண்ணே .... "எனும் மொட்ட ராஜேந்திரனிடம், "நம்புறவங்களை மட்டும் தான் ஏமாத்த முடியும். நம்பாதவங்களை எப்படி ஏமாத்த முடியும் ..?" எனும் ஜான் விஜய் வித்தியாச வில்லத்தனத்திலும் வழக்கம் போலவே கவருகிறார்.

மகாநதி சங்கர், மாரிமுத்து, வினோதினி... அந்தக் குழந்தை நட்சத்திரம் உள்ளிட்ட இன்னும் பிறகேரக்டர்கள் ஆர்ட்டிஸ்டுகளும் கச்சிதம்.

லால்குடி என்.இளையராஜாவின் கலை இயக்கம் கச்சிதம். ரூபனின் படத்தொகுப்பில், காமெடி எனும் பெயரில் ரோபோவும், பன்னி மூஞ்சியும் எக்கச்சக்கமாய் கடித்திருப்பதை இன்னும் கொஞ்சம் கத்திரித்திருக்கலாம். எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு பேசியிருக்கிறது இருந்தும்... டி.இமானின் இசையில், "தாறுமாறு தக்காளி சோறு ... "நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி..... " உள்ளிட்ட பாடல்கள் ரசனை. ஆனால், பின்னணி இசை அவசரகதியில் அதிரடி செய்ய முற்பட்டு தோற்றிருக்கிறது.

கணேஷ் விநாயக் எழுத்து, இயக்கத்தில், பெண் குழந்தையை "ஜொள்ளு விட்டல்ல... " என அதிகப்படியாய் அடிக்கடி பேச விடுவது... உள்ளிட்ட பல படங்களில் பார்த்து பழகிய வியாதிகள், கேட்டுப் பழகிய கதைக் களங்கள், காட்சிப்படுத்தல்கள்... எல்லாம் ரசிகனை சற்றே படுத்துகின்றன. அவ்வப்போது படக்காட்சிகளில், வெளியே வந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டால், எம்.சுகுவின் இயற்கை எழில் கொஞ்சும் ஒளிப்பதிவையும், டி.இமானின் இனிய இசையையும் பாடல் காட்சிகளில் மட்டும் ரசிக்கலாம்!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget