ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிர்ஷ்ட லட்சுமி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி மகேஸ்வரி. நிகழ்ச்சியில் ஆடல், பாடல் என்று
கலக்கி வருகிறார். அதோடு விளம்பர படங்களிலும் நடித்தவர் இப்போது சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் மூலம் சினிமா நடிகையாகவும் ஆகிவிட்டார்.
"மீடியாவுக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதிர்ஷ்ட லட்சுமி நிகழ்ச்சி என்னை எல்லோரிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது. வெளியில் போனால் என்னை அதிர்ஷ்ட லட்சுமி என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். அது சந்தோஷமாக இருக்கிறது. தொகுப்பாளினி வேலை என்பது கேமரா முன்னால் நின்று ஸ்கிரிப்டை படித்துவிட்டுப்போவது என்று எளிதாக நினைக்கிறார்கள். இப்போது அப்படியில்லை. தங்களிடம் உள்ள தனித் திறமையை வெளிப்படுத்தினால் தான் அந்த நிகழ்ச்சியில் நிலைத்து நிற்க முடியும். ஸ்கிரிப்ட்டையும் தொகுப்பாளினிகள் தான் தயார் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வெங்கட்பிரபு சந்தித்தார். சினிமாவில் நடிக்கிறீங்களா என்று கேட்டார். ஏதோ விளையாட்டாக கேட்கிறார் என்று நினைத்து ஓகே சார் என்றேன். அதை மனதில் வைத்து சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடிக்க அழைத்தார். ரொம்ப ஜாலியான ஸ்கிரிப்ட், ஜாலியான படம் என்பதால் உடனே ஒப்புக் கொண்டேன். சினிமாவில் நடிப்பதும் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன்'' என்கிறார் மகேஸ்வரி.

கருத்துரையிடுக