பேட்டரியா இனி சூப்பர் கெபாசிட்டர்

முன்பு பேக்கும் கையுமாக சாலை பார்த்து நடந்தவர்கள் கூட இன்று ஸ்மார்ட் போன்களை பவர் பேங்கில் இணைத்து வாட்ஸ் அப்பில்
சாட்டியபடி நடந்துவருகின்றனர். பல்லாயிரம் மில்லி ஆம்ப் பேட்டரிகளைத் தயாரித்தும் சார்ஜ் சரிவதை பல நிறுவனங்கள் இன்னும் சரிசெய்ய முடியவில்லை.

பிரச்னையை அப்படியே விட்டால் எப்படி? இப்பிரச்னையைத் தீர்க்க அதற்கெனவே சென்ட்ரல் ஃப்ளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் கண்துஞ்சாமல் கண்டுபிடித்து உலகிற்கு அளித்திருக்கும் ஒரு டிஜிட்டல் கொடைதான் சூப்பர் கெபாசிட்டர். சென்ட்ரல் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள நெகிழ்வுத்தன்மை கொண்ட சூப்பர் கெபாசிட்டரை 30 ஆயிரம் முறைகளுக்கு மேல் சார்ஜ் ஏற்றிப் பயன்படுத்தலாம்.

இதனைக் கண்டுபிடித்துள்ள நானோ டெக்னாலஜி துறை, ஸ்மார்ட் போன்களுக்கும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் பயன்படுத்தும் நோக்கில் இதனை மேம்படுத்தியுள்ளது. தற்போது போன்களில் பயன்படுத்தி வரும் பேட்டரிகளுக்கு மாற்றாக சூப்பர் கெபாசிட்டரை பயன்படுத்தினால் சில நொடிகளில் சார்ஜ் ஏறுவதோடு, ஒரு வாரத்திற்கு சார்ஜ் தாங்கும் என மெல்லிய குரலில் பேசுகிறார் ஆராய்ச்சியின் துணை ஆய்வாளரான நிதின் சௌத்ரி.

ஒரு ஆண்டிற்குப் பிறகு போன்களின் லித்தியம் பேட்டரிகளின் திறன் குறைவது அனைவரும் அறிந்ததே. நானோ பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கிய சூப்பர் கெபாசிட்டரை பேட்டரிகளுக்கு மாற்றாக பயன்படுத்த முடியுமா என்பது குறித்த ஆய்வில் இன்னொரு பிரச்னையும் உருவானது.

லித்தியம் அயன் பேட்டரிகளைப் போலவே பலமடங்கு மின்னாற்றலை சூப்பர் கெபாசிட்டர் தேக்கி வைக்கும் திறன் கொண்டது என்பதோடு அதற்கேற்ப மாறுதல்களை பயன்படுத்தும் பொருட்களில் உருவாக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பிராக்டிகல் பிரச்னைகள் இதிலுண்டு.   கெபாசிட்டரை மேம்படுத்த கிராபீன் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்துள்ளதில் கிடைத்தது பாதி வெற்றிதான்.

சிறிய மின்சாதன பொருட்களில் சூப்பர் கெபாசிட்டர் சக்தியைத் தேக்குவது, அதன் அடர்த்தி, நிலைத்தன்மை ஆகிய வற்றில் சிறப்பான தன்மை கொண்டுள்ளது என்று உற்சாகமாகிறார் சௌத்ரி. நிலைத்தன்மையை எத்தனை முறை அதனை சார்ஜ் செய்யும் எண்ணிக்கை எனலாம். லித்தியம் அயன் பேட்டரிகளை 1500 முறை என்றால், கெபாசிட்டருக்கு சில ஆயிரங்கள் என்று கூறலாம்.

நெகிழ்வுத்தன்மை இருப்பதால் வாட்ச் உள்ளிட்ட கருவிகளில் பயன்படுத்தலாமே என்றால், வணிகத்திற்கு இன்னும் சூப்பர் கெபாசிட்டர் தயாராகவில்லை  என சாதுரியமாக பேசுகிறார் நானோடெக்னாலஜி துறையின் இணை பேராசிரியரான யியான்வூங் எரிக் ஜங். லோபேட்டரி அலாரம் இனி ஒலிக்காது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget