பெங்களூரில் இருந்து தமிழுக்கு இறக்குமதியானவர் நிக்கி கல்ராணி. ஆரம்பத்தில் கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்த இவர், ஆதி நாயகனாக
நடித்த யாகவராயினும் நாகாக்க படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதையடுத்து ஜி.வி.பிரகாசுடன் டார்லிங் படத்தில் நடித்தார். இந்த படங்களில் டார்லிங்தான் முதலில் திரைக்கு வந்தது. அதோடு அந்த படமும் வெற்றி பெற்றதால், தமிழில் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமான நிக்கி கல்ராணி, இப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
மேலும், தொடக்கத்தில் சரிவர தமிழ் பேச முடியாமல் தடுமாறி வந்த அவர், தற்போது சரளமாக தமிழ் பேசுகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், கலைக்கு மொழி கிடையாது என்றபோதும், வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தால்தான் அதற்கேற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிக்க முடியும். அதனால் முடிந்தவரை நான் நடிக்கிற எல்லா மொழிகளையுமே பயிற்சி எடுத்து வைத்திருக்கிறேன். அந்த வகையில், கன்னடம், ஆங்கிலம், இந்தி எனக்கு தெரிந்த மொழிகளாக இருந்தன. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க முடிவெடுத்தபோது இந்த மொழிகளையும் பேச கற்றுக்கொண்டேன். இப்போது இந்த 6 மொழிகளையுமே நான் நன்றாக பேசுவேன். எனக்கு மொழிப்பிரச்சினை இல்லை என்பதினால்தான் அதிகப்படியான படங்களும் புக்காகி வருகின்றன என்கிறார் நிக்கி கல்ராணி.

கருத்துரையிடுக