அடம் பிடிக்கும் மம்மி நடிகை சரண்யா

நடித்தால் ஜோடியாக மட்டுமே நடிப்பேன். வேறு எந்த, கேரக்டர் கொடுத்தாலும் வேண்டாம், என, அம்மா நடிகை சரண்யா கூறியுள்ளார். ராஜபாண்டி
இயக்க, விஜய் வசந்த், சமுத்திரக்கனி, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள, அச்சமின்றி படம், 30ம் தேதி வெளியாகிறது. இதில், அமைச்சரின் மனைவியாக, சரண்யா நடித்துள்ளார். சமீபத்திய படங்களில், காமெடி, சென்டிமென்ட் கலந்த, அம்மா கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த சரண்யா, இப்படத்தில், வில்லி வேடம் ஏற்றுள்ளார்.

படம் குறித்து, சரண்யா கூறியதாவது: இயக்குனர் கதை சொன்ன போதே, நடிக்க பயந்தேன். முதல் நாள் படப்பிடிப்புக்கு முன் கூட, இயக்குனருக்கு போன் செய்து, நடிக்க மாட்டேன் என்றேன். ஆனால், இயக்குனர், உங்களால் முடியும் என, நம்பிக்கை கொடுத்தார். என்னால் முடிந்த வரை நடித்துள்ளேன். தனுஷ், சிவா, உதயநிதி என நிறைய பேருக்கு, அம்மாவாக நடித்ததால், என்னை அம்மாவாகவே பார்க்கின்றனர். அம்மாவாக நடிப்பது, ரொம்ப சவுகரியமாக உள்ளது. 50 படத்தில், அம்மா ரோலில் நடித்துள்ளேன். என் பெரிய மகள், மருத்துவம் படிக்கிறாள்; சிறிய மகள், பிளஸ் 2 படிக்கிறாள். இருவருக்கும் சினிமாவுக்கு வர ஆசையில்லை. படப்பிடிப்பு இல்லாத நாட்களில், தையல் வேலை தான். ஆறு மாத தையல் படிப்பு கூட சொல்லித் தரேன்; இதற்கென தனியாக ஆசிரியர்களும் உள்ளனர். ரஜினி, கமல் கூட மீண்டும் நடிப்பீர்களா என, சிலர் கேட்கின்றனர். நான் தயார்; ஆனால், ஜோடியாக மட்டுமே நடிப்பேன். இவ்வாறு சரண்யா கூறினார்.

மீண்டும் போலீஸ் அதிகாரியாக கார்த்தி : போலீஸ் அதிகாரியாக, கார்த்தி நடிக்கும் படத்திற்கு, தீரன் அதிகாரம் ஒன்று என பெயரிட்டுள்ளனர். ஏற்கனவே, சிறுத்தை படத்தில், போலீஸ் அதிகாரியாக, கார்த்தி மிரட்டியிருந்தார். புதிய படத்தில், கார்த்தி ஜோடியாக, ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். சதுரங்க வேட்டை வினோத், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு, 2017 ஜனவரியில் துவங்குகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget