மதுரை மல்லி நிவேதா பெத்துராஜ்

அட்டகத்தி தினேஷ் நடித்த ஒருநாள் கூத்து படத்தில் நாயகியாக நடித்தவர் நிவேதா பெத்துராஜ். அந்த படத்தை அடுத்து ஷக்தி சுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் டிக் டிக் டிக், தளபதி பிரபு
இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். இதில் ஜெயம்ரவி படத்தில் மாடர்ன் கெட்டப்பில் நடிக்கும் நிவேதா, உதயநிதி நடிக்கும் படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார்.

மேலும், மதுரை மண்வாசனை கதையில் உருவாகி வரும் இந்த படம் அரசியல் கலந்த காமெடி கதையில் தயாராகி வருகிறது. இதில் உதயநிதியுடன் பார்த்திபன், சூரி ஆகியோருடன் நிவேதா பெத்துராஜூம் நடிக்கிறார். மதுரைக்கார பெண் வேடம் என்பதால் இந்த படத்தில் பாவாடை தாவணி அணிந்து பக்கா மதுரைக்கார பெண்ணாகவே நடித்துக்கொண்டிருக்கிறாராம். அதோடு, நிவேதா பெத்துராஜ் படித்து வளர்ந்தது துபாயில் என்றாலும் அவரது சொந்த ஊர் மதுரைதான். அதனால் தனது ரியல் கெட்டப்பில் இருந்து மாறி மதுரை பெண்ணாகவே மாறி நடித்துள்ள நிவேதா, ரொமான்ஸ் காட்சிகளில் ஒருநாள் கூத்து படத்தை விடவும் இந்த படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி படப்பிடிப்பு தளத்திலேயே கைதட்டல் பெற்று வருகிறாராம்.

இந்த பொதுவாக என் மனசு தங்கம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்தே மதுரை, தேனி ஏரியாக்களில்தான் நடந்து வருகிறது. ஜனவரி 15-ந் தேதியோடு அனைத்துகட்ட படப்பிடிப்பும் முடிந்து, பூசணிக்காய் உடைக்கிறார்களாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget