கோலிவுட் புது வரவு தன்யா

வீட்டில் சினிமா பற்றி யாரும் பேச மாட்டோம், என, பலே வெள்ளையத்தேவா படத்தில் அறிமுகமாகும் நடிகை, தன்யா கூறினார்.சசிகுமார், கோவை சரளா
நடிக்கும் இந்தப்படம் மூலம், தமிழில் அறிமுகமாகிறார், நடிகை தன்யா. இவர், பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி.திரையுலக பயணம் குறித்து, அவர் கூறியதாவது:படித்து பட்டம் பெற்ற பிறகே சினிமா என, வீட்டில் கூறினர். டிகிரி முடித்து, மேற்படிப்பு படிக்கும் போது, ராதா மோகனின், பிருந்தாவனம் படத்தில் நடித்தேன். அப்போது, பலே வெள்ளையத் தேவா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. தனிக்கொடி என்ற கேரக்டரில், மதுரைபெண்ணாக நடிக்கிறேன். தாத்தா தான் எனக்கு எல்லாமே. அவரது நேர்மை, நேரம் தவறாமை போன்றவை, சினிமாவுக்கு வரும் முன், நான் கற்ற பாடம். நடிப்பில் அவர் தான் எனக்கு முன்னுதாரணம். யதார்த்தமாக, பாத்திரத்தை உணர்ந்து நடிக்க வேண்டுமென, அவரிடம் கற்றுக் கொண்டேன். நாங்கள் சினிமாவில் இருந்தாலும், யாரும் வீட்டில் சினிமா பற்றி பேசக்கூடாது என்பது தாத்தா உத்தரவு.சினிமாவுக்கு வரும் முன், 15 ஆண்டுகள் பரதம் கற்றேன். தாத்தாவின் பெயர் எனக்கு பலமாக இருந்தாலும், அவரது பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற நெருக்கடியும் உள்ளது. இந்தப் படத்தில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. என்னை, அறிமுக நாயகியாக பார்க்காமல் அனைவரும், அன்போடு கவனித்துக் கொண்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget