2011-ல் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் தமிழுக்கு வந்த ஹன்சிகா, அதே ஆண்டில் பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்திலும்
ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து தெலுங்கில் அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்தபோதும் தமிழில்தான் அவர் அதிகப்படியான படங்களில் நடித்தார். அந்த வகையில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம்ரவி, ஆர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர், தற்போது மீண்டும், ஜெயம்ரவியுடன் போகன் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் வழக்கமான ஹீரோயினியாக இல்லாமல் மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லும் ஹன்சிகா, இந்த படத்தை தயாரித்துள்ள பிரபுதேவாவை பார்க்கையில் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. காரணம், எங்கேயும் காதல் படத்தில் நடித்தபோது படப்பிடிப்பில் எந்நேரமும் அவர் பரபரப்பாக இருப்பார். அவருடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். மேலும், இப்போது இந்தி சினிமாவிலும் கலக்கி வரும் அவர், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு, நடனம் என ரொம்ப பிசியாக இருந்து வருகிறார். நான் முதன் முதலில் சந்தித்தபோது எப்படி எனர்ஜிடிக்காக இருந்தாரோ அதேபோல் இப்போதும் இருக்கிறார். அவரை பார்க்கையில் ரொம்ப ஆச்சர்யமாக உள்ளது என்கிறார் ஹன்சிகா.

கருத்துரையிடுக