உணவுப் பொருட்கள் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

‘‘உணவுப் பொருட்கள் வாங்கும்போது அதன் விலை, பிராண்ட் ஆகியவற்றையே பெரும்பாலும் கவனிக்கிறோம். கூடுதலாக வேறு சில
விஷயங்களையும் கவனிக்க வேண்டியது முக்கியம்’’ என்கிறார் கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் இயக்குநர் சந்தானராஜன். அப்படி என்னென்ன கவனிக்க வேண்டும்?‘‘உணவுப் பொருட்களை வாங்கும்போது அதன் பெயர், பொருள் தயாரிக்கப்பட்ட நாள், பயன்பாட்டு நாள், நிகர எடை, அதன் அளவு, அதிகபட்ச விலை, Batch No, Lot No, Code No ஆகிய இந்த மூன்றில் ஏதாவதொரு எண்,  FSSAI Licence No (Food Safety and Standards Authority of India) மற்றும் சைவ உணவுப் பொருளாக இருந்தால் பச்சை நிற குறியீடு, அசைவ உணவுப் பொருளில் சிவப்பு நிற குறியீடு, நுகர்வோர் பொருள் பற்றிய புகார்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்கள் போன்றவை அந்தப் பொருளின் லேபிளில் அச்சிடப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.’’தரமற்ற உணவுப்பொருள் என்பது தெரிந்தால் என்ன செய்ய வேண்டும் ?‘‘உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் படி, உணவுப்பொருட்கள் தொடர்பாக பல்வேறு அபராதங்களை அரசு விதிக்கிறது.

தவறான விளம்பரம் செய்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் உண்டு. உணவுப் பொருள் தரக்குறைவாக இருந்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம். பாக்கெட் லேபிளில் பொருள் பற்றிய முழுமையான விவரங்கள் இல்லை என்றாலோ, தவறான தகவல்கள் இருந்தாலோ ரூ.3 லட்சம் வரை அபராதம் கட்ட வேண்டும்.உணவுப் பொருளோடு பாதுகாப்பற்ற வேறுபொருட்கள் கலந்திருந்தால் ஒரு லட்சம் வரை அபராதம். பாதுகாப்பற்ற முறையில் உணவு தயாரிப்பது மற்றும் விற்பதற்கு ஒரு லட்சம் வரை அபராதம். உணவு பாதுகாப்பு அதிகாரி சொல்லும் நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால் ரூ.2 லட்சம் வரை அபராதம்.

உணவுப் பொருளோடு உள்ள கலப்படப் பொருள் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாவிட்டால் ரூ.2 லட்சம் வரை அபராதம், அந்த பொருள் உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. உணவுப் பொருள் தவறாக இருந்தாலோ, சரியில்லை என்றாலோ 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற சட்டங்கள் நுகர்வோருக்கு சாதகமாக இருப்பதால், பொதுமக்கள் சட்ட உதவியைத் தயங்காமல் நாடலாம்.’’
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget