சந்தானத்திற்கு பிறகு முன்னணி காமெடியனான சூரி, தற்போது சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் கத்திச்சண்டை படத்தில் நடித்துள்ளார்.
அதுவும் வைகைப்புயல் வடிவேலு காமெடியனாக ரீ-என்ட்ரியாகியுள்ள இந்த படத்தில் அவரும் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஒரு காட்சியில்கூட சூரி நடிக்கவில்லை. காரணம், முதல் பாதியில் விஷாலின் நண்பராக சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் இடைவேளைக்கு முன்பே முடிந்து விடுகிறதாம். அதையடுத்து இடைவேளைக்குப்பிறகு மனோதத்துவ டாக்டராக வடிவேலு என்ட்ரி கொடுக்கிறாராம்.
மேலும், இப்படி முதல் பாதியில் மட்டுமே சூரி நடித்திருந்தபோதும் அவர் நான்குவிதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். கதைப்படி, தனது நண்பரான விஷாலுக்கு தமன்னா மீது காதல் ஏற்பட, காதல் தூது செல்வாராம் சூரி. அதற்காக அவர், சாமியார், பிச்சைக்காரர், கராத்தே வீரர், பெண் வேடம் என நான்கு விதமான கெட்டப்புகளில் காதல் தூது செல்வாராம். அப்படி சூரி நடித் துள்ள காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாம். அதனால்தான், வடிவேலு நடிக்கிற படத்தில் தானும் நடித்த போதும், தனக்கு எந்த பாதிப்பும் வராது என்று தைரியமாக இருக்கிறாராம் சூரி.

கருத்துரையிடுக